பெண்களுக்காகப் புதிய ‘பிங்க்’ பேருந்து மற்றும் ஆட்டோ சேவை முதல்வர் தொடங்கி வைத்தார்
27 Jan 2026, 3:28 pm
<p><strong>பெண்களுக்காகப் புதிய ‘பிங்க்’ பேருந்து மற்றும் ஆட்டோ சேவை முதல்வர் தொடங்கி வைத்தார்</strong></p>
<p>சென்னை, ஜன. 27- பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், சென்னையில் பெண்களுக்கான பிரத்யேக பிங்க் பேருந்து மற்றும் ஆட்டோ சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று(ஜன.27) தொடங்கி வைத்தார். பிங்க் பேருந்துகள்: முதற்கட்டமாக 10 பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை 56A (பிராட்வே - எண்ணூர்), 32B (கொருக்குப்பேட்டை - விவேகானந்தர் இல்லம்), 57 (செங்குன்றம் - வள்ளலார் நகர்), 102B (பிராட்வே - செம்மஞ்சேரி) மற்றும் 102K (பிராட்வே - கண்ணகி நகர்) ஆகிய 5 வழித்தடங்களில் தலா இரண்டு பேருந்துகள் வீதம் இயக்கப்படும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரூ.12 கோடி மதிப்பீட்டில் 80 பிங்க் நிற ரோந்து வாகனங்கள் பயன் பாட்டிற்கு வந்துள்ளன.</p>
