மு.க. ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்களிடம் வாழ்த்துபெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்
11 May 2026, 9:31 pm

மு.க. ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்களிடம் வாழ்த்துபெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்

சென்னை, மே 11 - தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் திங்கட் கிழமையன்று பதவி யேற்றுக் கொண்டனர்.

இந்தப் பதவியேற்பு முடிந்ததும், முதலமைச்சர் ஜோசப் விஜய், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் இல்லத் திற்கு நேரில் சென்று வாழ்த்து பெற்றார்.

அவரை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டா லின், சிரித்த முகத்துடன் கட்டி யணைத்து வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்று பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். முதல்வர் விஜய்யும் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் இருவரும் பரஸ்பரம் உரையாடினர்.

உதயநிதி புத்தகம் அன்பளிப்பு

எதிர்க்கட்சித் தலை வரும் முன்னாள் துணை முத லமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தி.மு.க.வின் 75 ஆண்டுகால வரலாற்றுப் பயணத்தை பறைசாற்றும் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு தி.மு.க 75’ என்ற நூலை முதலமைச்சர் விஜய்க்கு அன்பளிப்பாக வழங்கினார்.

ஆலோசனைகள் வழங்கிய மு.க. ஸ்டாலின்

முதலமைச்சர் விஜய் தன்னை வந்து சந்தித்தது குறித்து, தனது சமூக வலை தளப் பக்கத்தில் பதிவிட்ட, திமுக தலைவர் மு.க. ஸ்டா லின், “தமிழ்நாடு முதலமைச் சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியல் நாகரி கத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவ ருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும் ஆலோச னைகளையும் வழங்கி னேன்” என்று பதிவிட்டுள் ளார்.

வைகோ, அன்புமணி, சீமானிடம் வாழ்த்து

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்த, முதலமைச்சர் விஜய், அடுத்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

பின்னர் பாமக தலை வர் அன்புமணி ராமதாஸை யும், நாம் தமிழர் கட்சி யின் தலைமை ஒருங்கி ணைப்பாளர் சீமானை அவ ரவர்களது இல்லங்களில் நேரில் சென்று சந்தித்தார். அனைவரும் பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.