தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எல்.ஆர்.ஜி. கல்லூரியில் மேம்பாட்டு பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்

6 hours before
எல்.ஆர்.ஜி. கல்லூரியில் மேம்பாட்டு  பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்
<p><strong>எல்.ஆர்.ஜி. கல்லூரியில் மேம்பாட்டு பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்</strong></p><p>திருப்பூர், நவ.18 -திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலை கல்லூரியில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டங்கள், ஆய்வகம்,திறந்தவெளி அரங்கம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னை, தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு கலை மகளிர் கல்லூரியில் ரூ.19.10 கோடி மதிப்பீட்டில் கட்டிடத்தின் உள் கட்டமைப்பில் 9வகுப்பறைகள் மற்றும் 6 ஆய்வகங்கள் 2270.80 ச.மீட்டரிலும், 18 வகுப்பறைகள் மற்றும் 6 ஆய்வகங்கள் 3062.94 ச.மீட்டரிலும், கூடுதல் வகுப்பறைகள்- 56.32 ச.மீட்டரிலும், பல்நோக்கு திறந்தவெளி அரங்கம்-1793 ச.மீட்டரில் ஒய்வு கூடம், மின்சார அறை மற்றும் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுள்ளன. இந்த மேம்பாட்டுப் பணிகளை முதல்வர் ஜோசப் விஜய் காணொளிகாட்சி வாயிலாக புதனன்று திறந்து வைத்தார். இதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். வனம் பவுண்டேசன் சார்பில் எல்.ஆர்.ஜி அரசு கலை மகளிர் கல்லூரி வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடும் பணியினையும் ஆட்சியர் தொடங்கி வைத்தார்.மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல துணை இயக்குநர் (உயர்கல்வித்துறை) செண்பகலட்சுமி, எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலை கல்லூரி முதல்வர் சுமதி உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.