நீதிபதி வி.மோகனாவுக்கு முதல்வர் வாழ்த்து
1 Jun 2026, 9:31 pm
<p><strong>நீதிபதி வி.மோகனாவுக்கு முதல்வர் வாழ்த்து</strong></p><p>சென்னை, ஜூன் 1 - தமிழ்நாட்டைச் சேர்ந்த கோயம்புத்தூர் மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா உள்பட 5 பேர் உச்ச நீதிமன்ற நீதி பதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மூத்த வழக்கறிஞராக நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டா வது பெண் என்ற பெருமையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் என்ற சிறப்பும் மோகனா அவர்களுக்கு கிட்டியுள்ளது. உச்ச நீதிமன்ற வரலாற்றில் 12 ஆவது பெண் நீதிபதி என்ற இடத்தையும் இவர் பெற்றுள்ளார். பஞ்சாப் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு மற்றும் மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகரும் இந்த நியமன பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சமூக வலை தளத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். “மோகனாவின் நியமனம் பெண் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு உந்து சக்தியாகத் திகழும் என்று அவர் குறிப்பிட் டார். தன் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பி லும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் மன மார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதாக” முதல மைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
