சீர்காழியில் வீதி வீதியாக வாக்குச் சேகரித்த முதல்வர்
8 Apr 2026, 5:30 am

சீர்காழியில் வீதி வீதியாக வாக்குச் சேகரித்த முதல்வர்

சென்னை, ஏப்.7 - தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.23 அன்று நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 31 அன்று திருவாரூரில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியதிலிருந்து திருச்சி, கரூர், ஈரோடு, கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில், சங்கரன்கோவில், விருதுநகர், திருமங்கலம் உட்பட பல மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

சீர்காழி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளருக்கு ஆதரவாக நடைப்பயிற்சியாக சென்று வாக்குச் சேகரித்தார். திமுக அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் கேட்டறிந்ததோடு, தேர்தல் வாக்குறுதிகளையும் விளக்கினார்.