சீர்காழியில் வீதி வீதியாக வாக்குச் சேகரித்த முதல்வர்
8 Apr 2026, 5:30 am

சீர்காழியில் வீதி வீதியாக வாக்குச் சேகரித்த முதல்வர்

சென்னை, ஏப்.7 - தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.23 அன்று நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 31 அன்று திருவாரூரில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியதிலிருந்து திருச்சி, கரூர், ஈரோடு, கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில், சங்கரன்கோவில், விருதுநகர், திருமங்கலம் உட்பட பல மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

முதல் இரண்டு கட்டப் பரப்புரைகளை முடித்துவிட்டு, புதுச்சேரியில் மூன்றாம் கட்டப் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், ஏப்ரல் 7 (செவ்வாய்க்கிழமை) சீர்காழி மற்றும் கடலூர் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டார்.

சீர்காழி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மநிமுக வேட்பாளர் செந்தில் செல்வனுக்கு ஆதரவாக நடைப்பயிற்சியாக சென்று வாக்குச் சேகரித்தார். திமுக அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் கேட்டறிந்ததோடு, தேர்தல் வாக்குறுதிகளையும் விளக்கினார். தேநீர் கடையில் மக்களோடு அமர்ந்து தேநீர் அருந்திய முதலமைச்சர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்து சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.