முந்தய பக்கம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: ஆட்சியர் ஆய்வு

5 Jun 2026, 3:21 am
முதலமைச்சரின்  காலை உணவுத் திட்டம்: ஆட்சியர் ஆய்வு
<p><strong>முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: ஆட்சியர் ஆய்வு</strong></p><p>உளுந்தூர்பேட்டை, ஜூன் 4 - கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா (ஜூன் 4) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தவும், பள்ளிக்கு அவர்களின் வருகையை அதிகரிக்கவும் கொண்டு வரப்பட்ட இத்திட்டம், எவ்வித தொய்வுமின்றிச் சிறப்பாகச் செயல்படுத்தப்படுவதை மாவட்ட ஆட்சியர் இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்தார். இந்த திடீர் ஆய்வின் போது பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram