முந்தய பக்கம்

முதல்வர் ஸ்டாலின் - ஓபிஎஸ் சந்திப்பு

20 Feb 2026, 2:39 pm
முதல்வர் ஸ்டாலின் - ஓபிஎஸ் சந்திப்பு
<p><strong>முதல்வர் ஸ்டாலின் - ஓபிஎஸ் சந்திப்பு</strong></p> <p>சென்னை தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக தெரி வித்திருந்த ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற வளாகத்தில் &nbsp;வெள்ளிக்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அவை நடவடிக்கைகள் முடிந்த பிறகு முதல்வர் தனது அறைக்குச் செல்லும் வழியில், ஓபிஎஸ் முன் கூட்டியே அங்கு காத்திருந்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து முதல மைச்சர் அறைக்குள் சென்ற ஓ.பன்னீர்செல்வம் சுமார் 10 &nbsp;நிமிடங்கள் அவருடன் உரையாடினார். கடந்த 2025 ஜூலை மாதம், அடையாறு தியோசோ பிகல் சொசைட்டி பூங்காவில் முதல்வர் நடைபயிற்சி மேற் கொண்டிருந்த போதும் ஓபிஎஸ் அவரைச் சந்தித்து நலம் விசாரித்திருந்தார். ஓபிஎஸ்ஸின் மிக நெருங்கிய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே திமுகவில் இணைந்திருக்கும் நிலையில், இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று ஓபிஎஸ் &nbsp;தரப்பு கூறினாலும், ஓரிரு நாட்களில் ஒரு முக்கியமான அரசியல் முடிவை அவர் அறிவிக்கலாம் என்ற எதிர் பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. மீண்டும் திமுக ஆட்சியே! தமிழகத்தில் மீண்டும் திமுகவே ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரி வித்தார். சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை முதல மைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்திய தற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த &nbsp;ஐந்தாண்டு ஆட்சியில் திமுக செய்த சாதனைகள் மக்கள் &nbsp;மனதில் ஆழமாகப் பதிந்துள்ளதாக கூறினார். திமுக வில் இணைவீர்களா என்ற கேள்விக்கு &ldquo;பொறுமையாக &nbsp;இருங்கள்&rdquo; என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram