சென்னையில் ஆடைகள் கண்காட்சி
26 Mar 2026, 2:46 pm
<p><strong>சென்னையில் ஆடைகள் கண்காட்சி</strong></p>
<p>சென்னை, மார்ச் 26- இந்தியாவின் உள்நாட்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆடை நிறுவனங்களை ஊக்குவிப்பதில் பெயர்பெற்ற ‘ஷப்ளிங் சூட்கேஸஸ்’ தளம், சென்னையில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. ‘பாப்-அப்’ விற்பனை என்ற பெயரில் இந்த நிகழ்வு ராயப்பேட்டை சத்யம் திரையரங்கம் பின்புறம் உள்ள அமெதிஸ்ட் வளாகத்தில் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் நவீன இந்திய அழகியலை மையமாகக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு நாள் கண்காட்சியில், தேர்ந்தெடுக்கப்பட்ட பல பிராண்டுகளின் வசந்தகால மற்றும் கோடைகால சேகரிப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. எளிய விசேஷங்களுக்கான ஆடைகள், அன்றாட உடைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் தனித்துவமான அணிகலன்கள் என அனைத்தும் இன்றைய கால மாற்றத்திற்கு ஏற்ப ஆடை வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளன என்று கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். கண்காட்சிக்கு அனுமதி இலவசம். காலை 10 மணிமு</p>
