பள்ளிகளில் காலநிலைக் கல்வி திட்டம் தொடங்கி வைப்பு
19 Jan 2026, 2:23 pm
<p><strong>பள்ளிகளில் காலநிலைக் கல்வி திட்டம் தொடங்கி வைப்பு</strong></p>
<p>சென்னை, ஜன. 19- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.24 கோடி யில் காலநிலை கல்வி திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவை யில் அறிவித்திருந்தார். இந்நிலையில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திங்களன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அரசுப் பள்ளிகளில் கால நிலைக் கல்வி மற்றும் குளுமைப் பள்ளிகள் திட்டத் தினை துவக்கி வைத்தனர். தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ் நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் வாயிலாக கால நிலை மாற்றச் சவால்களை எதிர்கொள்ள பல்வேறு தடுப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, சூழல் 2.0 விநாடி வினா வின் இறுதிப் போட்டி கடந்த ஜன.6 ஆம் தேதி நடை பெற்ற நிலையில், திங்களன்று சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை கூட்ட அரங்கில், காலநிலைக் கல்வி மற்றும் குளுமைப் பள்ளிகள் முன்னெடுப்புகளின் துவக்க விழா நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கால நிலைக் கல்வியறிவு பாடத் தொகுதிகளை வெளியிட்டு, காலநிலைக் கல்வி திட்டத்தை துவங்கி வைத்தார். நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஐக்கிய நாடுகள் சுற்றுச் சூழல் திட்டத்தினால் உருவாக்கப்பட்ட பசுமையான எதிர்காலத்திற்கு குளுமையான வகுப்பறைகள் மற்றும் பசுமைப் பள்ளிகளில் அமைவான குளிரூட்ட உத்திகளை ஒருங்கிணைத்தல் ஆகிய புத்தகங்களை வெளியிட்டு, சென்னை நகரிலுள்ள சென்னைப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், திருவான்மி யூர் சென்னை மேல்நிலைப் பள்ளியிலும் குளுமைப் பள்ளிகள் திட்டத்தினை துவங்கி வைத்தார். தொடர்ந்து, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹ்யூ மன் செட்டில்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பசுமைப் பள்ளிகள் தாக்க அறிக்கையை வெளியிட்டு, சென்னை, அம்பத்தூர் பெருந்தலைவர் காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொல்லுமேடு அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு பசுமைப் பள்ளிகளுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.</p>
