தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தளிர்களின் கைவண்ணம்

18 Jul 2026, 10:11 pm
தளிர்களின் கைவண்ணம்

தளிர்களின் கைவண்ணம்

P.சே குவேரா, 11 ஆம் வகுப்பு ஏ பிரிவு, இன்ஃபேண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

மகிநிகா, 3ஆம் வகுப்பு, சைதன்யா பள்ளி, டிகேடி மில் சாலை, கணபதிபாளையம், திருப்பூர் மாவட்டம் .

காலநிலை மாற்றமும் தூக்கமின்மையும்

காலநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் தூக்கத்தை இழந்து வருகிறார்கள். இதில் இந்தியா ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தென்னிந்தியாவில் உள்ளவர்கள் ஆண்டுக்கு 78-91 மணிநேரத் தூக்கத்தை இழக்கிறார்கள். 107 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், சென்னை (93 மணிநேரம்), மும்பை (84 மணிநேரம்), மற்றும் கொல்கத்தா (80 மணிநேரம்) மோசமான பாதிப்பிற்குள்ளான நகரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மிளகாய் சாப்பிடுவதும் புற்றுநோய் அபாயமும்

அதிகமாக மிளகாய் சாப்பிடுபவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் (oesophageal cancer) ஏற்படும் அபாயம் சற்று அதிகம் என 11,000 பங்கேற்பாளர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. இருப்பினும், மிளகாய் நேரடியாகப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பதற்குப் போதிய ஆதாரம் இல்லைaஎன்று ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

நிலவில் மனிதன் வந்த தடயங்கள் அழிய வாய்ப்பு

நிலவில் தரையிறங்கும் விண்கலங்களில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயு, விண்வெளி வீரர்கள் நிலவில் விட்டு வந்த தடயங்களைச் சிதைக்கக்கூடும் என புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. மேலும், நிலவின் சில பள்ளங்களில் பில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையான எரிமலைக்கற்கள் மற்றும் விண்கற்களின் எச்சங்கள் பனிக்கட்டி வடிவில் இருக்கலாம், அது இப்போது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மரணத்திற்குப் பின் கண் பதிலளிக்கும் அதிசயம்

ஒருவர் இறந்த 10 மணி நேரம் கழித்தும், மனிதக் கண் ஒளியின் வெளிச்சத்திற்குப் பதிலளிக்கும் திறன் கொண்டிருக்கிறது என ‘சென்டர் ஃபார் ஜெனோமிக் ரெகுலேஷன்’ (Centre for Genomic Regulation) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இரத்த ஓட்டத்தை செயற்கையாக உருவாக்கி ஆய்வு செய்ததில், விழித்திரை (retina) 24 மணி நேரம் வரை தனது அமைப்பைப் பாதுகாத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இது கண் நோய்களுக்கான புதிய சிகிச்சைகளைக் கண்டறிய உதவும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.