காலநிலை மாற்றத்தின் தாக்கம் முன்கூட்டிய பிறப்பு அதிகரிப்பு
4 Nov 2026, 9:56 pm

காலநிலை மாற்றத்தின் தாக்கம் முன்கூட்டிய பிறப்பு அதிகரிப்பு

புதுதில்லிகாலநிலை மாற்றம், பூமி வெப்பமயமாதல் காரணமாக இந்தியாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கும் கடுமையான சுகாதாரப்பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது என புதிய ஆய்வு மூலம்தெரிய வந்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்வீசிய கடும் வெப்ப அலை காரணமாக, இந்தியாவில் மட்டும் சுமார்8,830 குழந்தைகள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே (37 வாரங்களுக்கு முன்பே) பிறந்துள்ளதாக ‘ஜீரோ கார்பன் அனலிட்டிக்ஸ்’ அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கூடுதல் வெப்பமே இந்த முன்கூட்டிய பிறப்புகளுக்கு நேரடிக் காரணம் என்றும், கடந்த ஆண்டுஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடும்போது ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 10,050 முன்கூட்டிய பிறப்புகள் கூடுதலாகப் பதிவாகியுள்ளதாகவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெப்ப அலையின் தாக்கம்இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை. நாட்டில் பதிவான முன்கூட்டிய பிறப்புகளில் சுமார் 65 சதவீதப் பாதிப்புகள் பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம்மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டுமே நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு 1,000 பிறப்புகளுக்கும் அதிகபட்சமாக 12 முன்கூட்டிய பிறப்புகள் என்ற விகிதத்தில் கர்நாடகா மாநிலத்தில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது.

திரிபுரா மற்றும் மிசோரத்தில் வழக்கத்தை விட 2.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து, முன்கூட்டிய பிறப்பு ஆபத்து 11சதவிகிதம் உயர்ந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் வெப்பநிலை 0.74 டிகிரி செல்சியஸ் மட்டுமே உயர்ந்திருந்தாலும், அம்மாநிலத்தின் அதிகமக்கள் தொகை காரணமாக முன்கூட்டியேபிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள் அதிக வெப்பத்திற்கு உள்ளாகும்போது உடலில் நீர்ச்சத்து குறைதல், நஞ்சுக்கொடிக்குச் செல்லும் இரத்தஓட்டம் குறைதல், உடலில் ஏற்படும்அழற்சி மற்றும் பிரசவத்தை முன்கூட்டியே தூண்டும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக முன்கூட்டிய பிரசவம் ஏற்பட வழிவகுக்கிறது. சுற்றுப்புற வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் உயரும்போது முன்கூட்டிய பிரசவத்திற்கான வாய்ப்பு 4 சதவிகிதம் அதிகரிக்கிறது. கடும் வெப்ப அலையின் போது இந்த ஆபத்து 26 சதவிகிதம் உயர்வது குறிப்பிடத்தக்கது.

முறையான ஊட்டச்சத்தின்மை, ரத்த சோகை (Anaemia), கடுமையான உடலுழைப்பு, போதிய மருத்துவ வசதியின்மை ஆகியவை கர்ப்பிணிப் பெண்களுக்கான ஆபத்தை மேலும் அதிகரிக்கின்றன. குறிப்பாக, வறுமையில் வாழும் பெண்கள் போதிய மின்சாரம் அல்லது விசிறி/குளிரூட்டும் வசதி இல்லாத வீடுகளில்வசிக்கின்ற, நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்யும் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களின் பெண்களே கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.