தெளிவான “பார்வை”..!
9 Nov 2025, 2:21 pm
<p><strong>தெளிவான “பார்வை”..!</strong></p>
<p>நாட்டின் மாணவர் பேரவைத் தேர்தல்களில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தேர்தல் ஆர்வத்தைத் தூண்டுவதாகும். 2025க்கான தேர்தலும் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. கடந்த தேர்தலில் ஒற்றுமை குலைந்திருந்ததால் ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் ஏபிவிபி சில வெற்றிகளைப் பெற்றது. இந்தமுறை வாக்குகள் சிதறக்கூடாது என்ற முடிவில் எஸ்.எப்.ஐ-ஏஐஎஸ்ஏ அமைப்புகள் ஒரே அணியில் போட்டியிட்டன. இந்த அணியில் சர்வதேசக் கல்விக்கான பள்ளியின் கவுன்சிலர் பொறுப்புக்கு முகமது அஸ்லாம் போட்டியிட்டார். பார்வை மாற்றுத் திறனாளியான அவர், பீகாரைச் சேர்ந்தவர். ஆய்வுப் படிப்பை தற்போது மேற்கொண்டு வரும் அஸ்லாம், மாணவர் உரிமைகளுக்காகப் போராடுவது புதிதல்ல. பார்வை மாற்றுத் திறனாளியான இவர், தனது போராட்டப் பாதையில் தெளிவான பார்வை கொண்டிருக்கிறார். இடதுசாரிக் கொள்கைகளே உண்மையான மாற்றத்தைக் கொண்டு வரும் என்கிறார்.</p>
