முந்தய பக்கம்

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் தூய்மைப் பணி

16 Jan 2026, 3:00 pm
பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் தூய்மைப் பணி
<p><strong>பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் தூய்மைப் பணி</strong></p> <p>நாமக்கல், ஜன.16- பழனி பாதையாத்திரை பக்தர்கள் தினந்தோறும் செல்லுவதால், குப்பைக் &nbsp;கழிவுகள் அதிகளவு காவிரி ஆற்றுப் பகு தியில் நிரம்பியுள்ளது. அதனை தூய் மைப் பணியாளர்கள் அகற்றும் பணி யில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் மல்லசமுத் திரம் வையப்பமலை, திருச்செங்கோடு, &nbsp;பள்ளிபாளையம், குமாரபாளையம், நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகள், சேலம் மாவட்டம் எடப்பாடி, நங்க வள்ளி, ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பழனி &nbsp;பாதையாத்திரை பக்தர்கள் பள்ளிபா ளையம் வழியே, ஈரோடு மாவட்டம் அரச் சலூர் தாராபுரம் வழியாக பழனி மலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு ஏராள மான பக்தர்கள் தினந்தோறும் பாதயாத் திரை செல்லுவதால், அவர்கள் உணவு &nbsp;உண்ட பாக்குமட்டை தட்டுகள் குடிநீர் &nbsp;பாட்டில்கள் இதர உணவு சார்ந்த குப் பைக் கழிவுகள் அதிகளவு காவிரி ஆற்றுப் பகுதியில் நிரம்பிக் கிடந்தது. இதனையடுத்து வெள்ளியன்று பள்ளிபாளையம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், காவிரி ஆற்று பாலத் தின் அருகே சுமார் ஒரு கிலோ மீட்டர் &nbsp;தூரத்திற்கு பரவலாக கிடந்த உணவு சார்ந்த குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆங் காங்கே குப்பை கழிவுகள் குவியிலாக வைக்கப்பட்டு நகராட்சி வாகனத்தின் மூலமாக கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பழனி பாதயாத்திரை பக்தர்கள் பயணம் &nbsp;மேற்கொள்வார்கள் என்பதால் தொடர்ந்து தூய்மைப் பணியை மேற் கொள்ளப்படும் என நகராட்சி நிர்வா கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram