தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வர்க்க ஒற்றுமையே வலுவான இந்தியாவை உருவாக்கும் வருமான வரி ஊழியர் சம்மேளன மாநாட்டில் சச்சிதானந்தம் எம்.பி., முழக்கம்

10 Jan 2026, 2:48 pm
வர்க்க ஒற்றுமையே  வலுவான இந்தியாவை உருவாக்கும் வருமான வரி ஊழியர் சம்மேளன மாநாட்டில் சச்சிதானந்தம் எம்.பி., முழக்கம்
<p><strong>வர்க்க ஒற்றுமையே &nbsp;வலுவான இந்தியாவை உருவாக்கும் வருமான வரி ஊழியர் சம்மேளன மாநாட்டில் சச்சிதானந்தம் எம்.பி., முழக்கம்</strong></p> <p>திருச்சி, ஜன. 10- &ldquo;விவசாயி மற்றும் தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால் மட்டுமே, சுரண்டலற்ற அனைவருக்குமான இந்தியாவை உரு வாக்க முடியும்&rdquo; என்று திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் தெரிவித்தார். திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வருமான வரி ஊழியர் சம்மேளனத்தின் (தமிழ்நாடு - புதுச்சேரி வட்டம்) 15ஆவது பிரதிநிதிகள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: தொழிலாளி &nbsp;வர்க்கத்தின் சவால் இன்றைய அரசியல் சூழலில் சங்கம் நடத்துவது பெரும் சவாலாக &nbsp;மாறியுள்ளது. ஒன்றிய அரசின் தொழி லாளர் விரோதப் போக்கிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வரும் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற வுள்ள தேசிய வேலைநிறுத்தப் போ ராட்டம் அமைய வேண்டும். உயிரி ழந்த ஊழியர் குடும்பங்களுக்குத் துணையாக அறக்கட்டளை நிறுவி நிதி வழங்கும் இச்சங்கத்தின் மனிதா பிமானப் பணி பாராட்டுக்குரியது. ஆனால், ஒன்றிய அரசின் ஊழியர் கொள்கையோ வாரிசு வேலை வழங்கும் அடிப்படை உரிமையைக் கூட மறுப்பதாக இருப்பது வேதனை யளிக்கிறது. பொதுத்துறை மீதான கார்ப்பரேட் ஆக்கிரமிப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு இன்று பல வழிகளில் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இந்தியா மட்டுமே வைத்துள்ள அதி நவீன எரிபொருள் மறுசுழற்சி தொழில் நுட்பத்தை, எந்தவிதப் போட்டியும் இல்லாத சூழலில் கார்ப்பரேட்டுக ளிடம் ஒப்படைக்கத் துடிப்பது யாருக்கான அரசாங்கம்? பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காகப் பொ துத்துறை நிறுவனங்களைத் தாரை வார்ப்பதை நாம் அனுமதிக்க முடி யாது. பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிப்போம் மக்களைச் சாதி, மத ரீதியாகப் பிரித்தாளும் போக்கு இன்று தொழிற் சங்கங்கள் வரை ஊடுருவியிருப்பதை நாம் எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும். அரசு மதத்தை நோக்கி &nbsp;நகர்ந்தால், மக்களும் அந்தப் பாதையை நோக்கித் தள்ளப்படு வார்கள். &nbsp;வருமான வரி செலுத்துவதில் மதம் பார்ப்பதுண்டா? &nbsp;இந்துக்களுக்கு எனத் தனி வரி விலக்கு உண்டா? இல்லை. எனவே, நாம் தொழிலாளி, ஊழியர் என்ற வர்க்க அடிப்படையில் ஒன்றுபட வேண்டும். தொழிற்சங்க ஒற்றுமை என்பது நமது கோரிக்கைகளுடன் மற்ற உழைக்கும் மக்களின் கோ ரிக்கைகளையும் இணைப்பதே ஆகும். விவசாயிகளின் பிரச்சனையாக இருந்தாலும், தொழிலாளர்களின் கோ ரிக்கையாக இருந்தாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நமது உரிமைகளுக்காக அவர்களும் குரல் கொடுப்பார்கள். அத்தகைய கூட்டுப் போராட்டங்களே வலுவான இந்தியாவை உருவாக்கும். கோரிக்கைப் பேரணி முன்னதாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், 50 சதவீத அக விலைப்படியை அடிப்படை ஊதி யத்துடன் இணைக்க வேண்டும் மற்றும் மத்திய அரசுப் பணிகளில் பிராந்திய அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோ ரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி வருமான வரி அலுவலகத்திலிருந்து மாநாட்டுத் திடல் வரை எழுச்சிமிகு பேரணி நடைபெற்றது. சென்னை முதன்மை தலைமை வருமான வரி ஆணையர் டாக்டர் சுதாகர் ராவ் மாநாட்டைத் துவக்கி வைத்தார். சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் சியாம் நாத் தலைமை தாங்கினார். அகில இந்திய பொ துச்செயலாளர் ரூபாக் சர்க்கார், மாநி லப் பொதுச்செயலாளர் எம்.எஸ். வெங்கடேசன் மற்றும் சிஐடியு மாநிலச் செயலாளர் கோபி குமார், அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். &nbsp;வரவேற்புக் குழுத் தலைவர் சுரேஷ் வரவேற்க, தமிழகம் முழுவ திலும் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இம்மாநாட் டில் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.