சிஜேபி போராட்டம் வாபஸ்
1 Sept 2026, 9:12 pm
<p><strong>சிஜேபி போராட்டம் வாபஸ்</strong></p><p>செப்.5ஆம் தேதி நடத்த இருந்தபோராட்ட அறிவிப்பை (வழக்கை ரத்து செய்யாமல் இருந்ததால்) திரும்பப் பெற்றுக்கொள்வதாக சிஜேபியின் செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>இதுதொடர்பாக அவர் கூறுகையில்,“ஒன்றிய அரசின் சாதகமான உறுதிமொழிகள் மற்றும் அவற்றுக்கு இன்று நீதிமன்றம் அளித்துள்ள அங்கீகாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும்,நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைக் கருத்தில் கொண்டும், செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறவிருந்தபேரணிக்கான அழைப்பை திரும்பப் பெறுவது பொருத்தமானது என்று சிஜேபி கருதுகிறது. இன்றைய உத்தரவு முறையாகச் செயல்படுத்தப்படும் என்று சிஜேபிஎதிர்பார்க்கிறது. இந்த முடிவுக்காக நீதிமன்றத்திற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என சவுரவ் தாஸ் தெரிவித்தார்.</p>
