தர்மேந்திர பிரதானை நீக்க மோடி அரசுக்கு சிஜேபி 24 மணிநேரம் கெடு!
24 Jul 2026, 9:10 pm
<p><strong>தர்மேந்திர பிரதானை நீக்க மோடி அரசுக்கு சிஜேபி 24 மணிநேரம் கெடு!</strong></p><p>புதுதில்லி மாணவர்கள் - இளைஞர்கள் போராட்டத்தால் மிரண்டு போ யுள்ள மோடி அரசு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது இந்த பேச்சுவார்த்தை தில்லியில் உள்ள வி.பி. ஹவுஸ்சில் நடைபெற்றது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருடன் ஒன்றிய அமைச்சர் களான ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகி யோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் சவுரவ் தாஸ், அஷுதோஷ் ரன்கா ஆகியோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா,“கூட்டம் கிட்டத்தட்ட 2 மணி நேரம் நீடித்தது. இன்றைய பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. அவர்களிடம் தேர்வுகளுக்காக 3 முக்கிய கோரிக்கைகளும் 5 சீர்திருத்தப் பரிந்துரைகளும் இருந்தன. சனியன்று பிற்பகல் மீண்டும் அவர்களைச் சந்தித்து, அரசாங்கத்திற்குள் நாங்கள் நடத்திய கலந்து ரையாடல் குறித்துத் தெரிவிப்போம் என்று அவர்களிடம் கூறியுள்ளோம்” என்று கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர் களைச் சந்தித்த கரப்பான்பூச்சி கட்சியின் பிரதிநிதிகள், “உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும், போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை திரும்பப் பெற வும் ஒன்றிய அரசு சம்மதம் தெரிவித்துள் ளது. ஆனால், தர்மேந்திர பிரதானின் பதவி விலகலைத் தவிர வேறு எதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதைப் பரி சீலிக்க நாங்கள் அரசுக்கு 24 மணி நேரம் அவகாசம் அளித்துள்ளோம். என்ற எங்கள் கோரிக்கை தொடர்பாக, சனியன்று மதியம் வரை ஒன்றிய அரசு அவகாசம் கோரியுள் ளது” எனத் தெரிவித்தனர். </p>
