ஜார்க்கண்ட் போராட்டத்திற்கு ஆதரவாக சிஜேபி
5 Aug 2026, 8:44 pm

ஜார்க்கண்ட் போராட்டத்திற்கு ஆதரவாக சிஜேபி

ஜார்க்கண்ட் மக்கள் சேவைஆணையம் நடத்திய 14ஆவது ஒருங்கிணைந்த முதன்மைத் தேர்வு மற்றும் ஜார்க்கண்ட் ஊழியர் தேர்வுவாரியத்தின் தேர்வுகள் ஆகியவற்றில் முறைகேடுகள், வினாத்தாள் கசிவு நடந்ததாக மாணவர்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ஆலோசனைக்குழு கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் தீப்கே,”மாணவர்கள் - இளைஞர்கள் தலைமையிலான எங்களது இயக்கம் தேர்தல் அரசியலில் ஈடுபடாமல், ஒரு “அழுத்தக் குழுவாகவே” தொடர்ந்து செயல்படும்.

தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து ஜார்க்கண்டில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும். சிஜேபி பிரதிநிதிகள்குழுவிரைவில் அம்மாநிலத்திற்குச் செல்லும்” என அவர் கூறினார்.