மாநில உரிமைகள் பாதுகாப்பு வரவேற்கத்தக்கது; தொழிலாளர்கள் நலன் புறக்கணிப்பு அதிர்ச்சியளிக்கிறது!
18 Jun 2026, 10:40 pm

மாநில உரிமைகள் பாதுகாப்பு வரவேற்கத்தக்கது; தொழிலாளர்கள் நலன் புறக்கணிப்பு அதிர்ச்சியளிக்கிறது!

சென்னை, ஜூன் 18- தமிழக சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் ஆற்றிய உரை, மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அமைந்திருப்பது வரவேற் கத்தக்கது என்றும், அதே சமயம் உழைக்கும் வர்க்கத்தின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டி ருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும் சிஐடியு மாநிலக் குழு தெரிவித்துள்ளது.

மாநில உரிமைகள்

இதுகுறித்து சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய பாஜக அரசின் மாநில உரிமைகளுக்கு எதிரான போக்குகள், தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கை ஆகியவற்றை நிராகரித்து, மதச்சார்பின்மையை ஆளுநர் உரை உயர்த்திப் பிடித்திருப்பதை வரவேற்கிறோம். மத்திய அரசின் தவறான கொள்கைகளை எதிர்க்கும் நடவடிக்கைகளில் சிஐடியு தமிழக அரசின் பக்கம் நிற்கும். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை ஊக்குவிக்கும் அரசின் கவனம் சிறப்பானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர் கொள்கை வகுக்க கோரிக்கை

மேலும், தொழில்களை ஊக்குவிக்கத் துடிக்கும் அரசு, அதன் உண்மையான இயக்க சக்தியான தொழிலாளர்களைப் புறக்கணிப்பது ஏற்கத்தக்கதல்ல. பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாக ‘தொழில் புரிய ஏதுவான சூழல்’ உருவாக்கப்படும் அதே வேளையில், உழைப்பவர்களின் சிரமங்களைத் தணிக்க அக்கறை காட்டப்படவில்லை. அரசு அறிவித்துள்ள 10 வளர்ச்சித் தூண்களில் ‘தொழிலாளர்கள்’ என்ற சொல்லே இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது. 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய, 42 சதவீதம் உள்ள பெண் உழைப்பாளர்களின் ஊதிய உயர்வு அவசியம். கடந்த ஆட்சியின் ஒப்பந்தமுறை மற்றும் வெளிமுகமை (Outsourcing) சுரண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்பி, அங்கன்வாடி, சத்துணவு, ஆஷா உள்ளிட்ட திட்டப்பணியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26,000 ஆக உயர்த்த வேண்டும். தொழில் கொள்கையைப் போல முறையான ‘தொழிலாளர் கொள்கை’ வகுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.