தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போனஸ் உரிமையை பறிப்பது தொழில் அமைதியை பாதிக்கும்! சிஐடியு எச்சரிக்கை

28 Oct 2026, 12:31 am
போனஸ் உரிமையை பறிப்பது தொழில் அமைதியை பாதிக்கும்! சிஐடியு எச்சரிக்கை

போனஸ் உரிமையை பறிப்பது தொழில் அமைதியை பாதிக்கும்!

சிஐடியு எச்சரிக்கை

சிஐடியு எச்சரிக்கை திருப்பூர், அக்.27-தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய போனஸ் உரிமையை முதலாளிகள் பறிப்பது, தொழில் அமைதியைபாதிக்கும் என்று சிஐடியு எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூரில் தியாகி குமரன் நினைவகம் முன்பாக திங்களன்று சிஐடியு சார்பில் போனஸ் கோரிக்கைஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூரில் அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர்கள், பீஸ் ரேட் உள்பட அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் சட்டப்படி போனஸ் வழங்க வேண்டும்என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பனியன், உள்ளாட்சி ஊழியர்கள், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுதொழிலாளர்கள் பங்கேற்றனர். பெண் தொழிலாளர்கள் கணிசமாகபங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கே.உன்னிகிருஷ்ணன் தலைமை ஏற்றார். இதில்போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியு பனியன் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் உரையாற்றினர்.இதில், தொழிலாளர்களின் போனஸ்என்பது சட்டப்படி உரிமையாகும். எனினும் முதலாளிகள் போனஸ்உரிமையை பறிக்க பார்க்கின்றனர். இது தொழில் அமைதியை பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும், அனைத்துப்பிரிவு தொழிலாளர்களுக்கும் கடந்த ஆண்டைவிட கூடுதல் போனஸ் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.