தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமைப்புசாரா நல வாரியத்தில் சாதிச் சான்றிதழ் கேட்பதை கைவிடுக! சிஐடியு வலியுறுத்தல்

15 May 2026, 10:14 pm
அமைப்புசாரா நல வாரியத்தில் சாதிச் சான்றிதழ் கேட்பதை கைவிடுக! சிஐடியு வலியுறுத்தல்
<p><strong>அமைப்புசாரா நல வாரியத்தில் சாதிச் சான்றிதழ் கேட்பதை கைவிடுக! சிஐடியு வலியுறுத்தல்</strong></p><p>சென்னை, மே 15- அமைப்புசாரா நல வாரியத்தில் தொழிலாளர்கள் பதியும் போது சாதிச் சான்றிதழ் கோருவதை கைவிட வேண்டுமென அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தையும், தமிழக அரசையும் சிஐடியு மாநிலக் குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிஐடியுவின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமீப காலமாக தமிழ்நாடு அமைப்புசாரா நலவாரியத்தில் பதியும் போது சாதிச் சான்றிதழ் தேவையென அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் வலியுறுத்துவது தேவையற்ற மன உளைச்சலை தொழிலாளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே நலவாரியத்தில் பதியும் போதும், புதுப்பித்தல் செய்யும் போதும் தங்கள் சாதியை சான்றிதழாக எடுக்க முடியாத நிலையில் சுயசாதி சான்றிதழ் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. தற்போதைய அறிவிப்பு அமைப்புசாரா நலவாரியம் முறையாக, தொடர்ச்சியாக செயல்பட தடையாக உள்ளது. நலவாரிய கூட்டங்களில் தொழிற்சங்கங்களின் கருத்துகளை கேட்டறியாமல் திடீர் திடீரென அறிவிப்பதால், தொழிலாளர் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. வாரியத்தில் பதிவு செய்யக் கூடியவர்கள் சாதாரண தொழிலாளிகள். இவர்களிடம் சாதிச் சான்றிதழ் கேட்பது என்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்பதை சிஐடியு மாநிலக் குழுவின் சார்பாக தெரிவிக்க விரும்புகிறோம். ஆகவே, தொழிலாளிகள் புதிதாக பதியும்போது எவ்வித குறுக்கீடும் இல்லாத வகையில் ஏற்கெனவே உள்ள நடைமுறைகளை பின்பற்றுமாறு மாநிலக்குழு சார்பாக வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.