தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிலாளர் விரோதச் சட்டங்கள் அமலாகாது என அறிவித்திடுக!

16 Jun 2026, 10:29 pm
தொழிலாளர் விரோதச் சட்டங்கள் அமலாகாது என அறிவித்திடுக!

தொழிலாளர் விரோதச் சட்டங்கள் அமலாகாது என அறிவித்திடுக!

தமிழக அரசுக்கு சிஐடியு வலியுறுத்தல்

உதகை, ஜூன் 16 - ஒன்றிய அரசின் நான்கு தொழி லாளர் விரோதச் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், உதகையில் மாநிலத் தலைவர் ஜி. சுகுமாரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். கண்ணன், பொரு ளாளர் எஸ். ராஜேந்திரன், உதவிப் பொதுச்செயலாளர்கள் வி. குமார், கே. திருச்செல்வன், கே. ஆறுமுக நயினார், இ. முத்துக்குமார் உட்பட மாநில நிர்வாகிகளும், நிர்வாகக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தொழிலாளர் பிரச்ச னைகள், சட்டவிரோதமான பணி நீக்கங்கள், தொழிற்சங்க உரிமைப் பாதுகாப்பு, குறைந்த பட்சக் கூலி, பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு போன்றவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.

பின்னர், சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ. சவுந்தரராசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித் தார். அப்போது அவர் கூறியதாவது

முதல்வரிடம் சிஐடியு முன்வைத்த 25 கோரிக்கைகள்

தமிழகத்தின் புதிய முதல்வர் ச. ஜோசப் விஜய்யை, சிஐடியு சார்பில் சந்தித்து, 25 கோரிக்கைகள் அளிக்கப் பட்டுள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் வருவதற்கு ஆதரவு அளிக்கிறோம். ஆனால், தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி, சட்டப்பூர்வ உரிமைகள், தொழிற்சங்க உரிமை ஆகியவை பின்பற்றப்பட வேண்டும்; தொழிலாளர் துறையில் கடும் ஆள் பற்றாக்குறை, செயல்பாடு குறைவை சீரமைக்க வேண்டும்.

ஒன்றிய அரசின் நான்கு தொழிலாளர் விரோத சட்டங்கள் தொழிலாளர் களுக்கு தீங்கானவை என்பதுடன், ரத்து செய்யப்பட வேண்டியவை. தமிழகத்தைப் பொறுத்தவரை, அவற்றை அமல்படுத்த மாட்டோம் என்று தவெக அரசு அறிவிக்க வேண்டும்

தொழிலாளர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்க!

முந்தைய ஆட்சியில் நடந்த தொழிற்சங்கம் தொடர்பான பழிவாங்கல், பொய் வழக்குகள், பணி நீக்கங்கள் அனைத்தையும் ரத்து செய்து தொழிலாளர்களை மீட்க வேண்டும். பல பன்னாட்டு தொழிற் சாலைகளில் நடைபெற்று வரும், அநியாய இடமாற்றம், இடைநீக்கம் போன்றவற்றுக்குத் தீர்வு வேண்டும்

தொழிற்சாலைகள் மூடப்படு வதற்கு ஒருநாளும் தொழிற்சங்கங்கள் காரணமாக இருந்தது இல்லை. அந்த நிறுவனங்களின் சந்தை, மேலாண்மை குறைபாடுகள், மாசு பாடு, அரசின் கொள்கை போன்றவை தான்.

ரூ. 26 ஆயிரம் குறைந்தபட்ச கூலியை அமல்படுத்த வேண்டும்

தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளது என்றால், ஏழை தொழிலாளர்களின் வருமானம் அதி கரிக்க வேண்டும். ஆனால், குறைந்த பட்ச கூலி ரூ. 26,000 அமலாகவில்லை. இந்த விஷயத்தில், முத்தரப்புக் குழுவை தமிழக அரசு உடனே மீண்டும் அமைக்க வேண்டும்.

பெண் தொழிலாளர்கள் எண்ணி க்கை அதிகரித்து வருவதால், பாது காப்பு, சம ஊதியம், தனிக் கழிப்ப றை, மகப்பேறு நலன்கள் போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும்.

போக்குவரத்து - டாஸ்மாக் ஊழியர் பிரச்சனைக்கு தீர்வு

தோட்டத் தொழிலாளர்களுக்கான பழைய சட்டங்கள் ரத்து செய்யப் பட்டதால், வீடு, மருத்துவம், கல்வி போன்ற நலன்கள் இல்லாமல் போயுள் ளன. அவை மீண்டும் உறுதி செய்யப்பட வேண்டும்.

போக்குவரத்துத் துறையில் தற்காலிக ஊழியர்களின் நிரந்தரம், அநியாய இடமாற்றங்கள் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். டாஸ்மாக் மதுபானக் கடை மூடலால் வேலை இழந்தவர்களுக்கு மாற்று அரசு வேலை வழங்கப்பட வேண்டும்.

துயரங்களை அனுபவிக்கும் நடைபாதை வியாபாரிகள்

சுயதொழில் செய்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், ஆட்டோ தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அளிக்கும் துன்புறுத்தல்கள் தடுக்கப்பட வேண்டும்.

பழங்குடியினர் மாற்றுக் குடியமர்வு பிரச்சனை, டான்டீ தொழிலாளர்கள் பிரச்சனை, தூய்மைப் பணியாளர் தினக்கூலி உயர்வு— இவை அனைத்தும் புதிய அரசுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. உதகையில் புதிய தொழிற்சா லைகள் இல்லாமை, அரசுத் துறைகளில் ஆட்கள் குறைவு ஆகியனவும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டுள்ளன.

தொடர் போராட்டங்களை சிஐடியு முன்னெடுக்கும்!

எனவே, தொழிலாளர்களின் உரிமை, நலன், பாது காப்பு, நியாயமான கூலி, தொழிற்சங்க உரிமை ஆகியவற்றுக் காக சிஐடியு தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும். இவ்வாறு அ. சவுந்தரராசன் கூறினார்.

தமிழகத்தில், பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இவற்றுக்கு கடுமை யான நடவடிக்கை அவசியம். ஆளுங்கட்சியில் இருந்தாலும் குற்றவாளிகளை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அ. சவுந்தரராசன் குறிப்பிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.