தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விசைத்தறித் தொழிலைப் பாதுகாக்க 1500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க சிஐடியு வலியுறுத்தல்!

13 May 2026, 11:08 pm
விசைத்தறித் தொழிலைப் பாதுகாக்க 1500 யூனிட்  இலவச மின்சாரம் வழங்க சிஐடியு வலியுறுத்தல்!
<p><strong>விசைத்தறித் தொழிலைப் பாதுகாக்க 1500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க சிஐடியு வலியுறுத்தல்!</strong></p><p>அவிநாசி, மே 13- நலிவடைந்து வரும் விசைத் தறித் தொழிலையும், பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத் தையும் பாதுகாக்க, தேர்தல் வாக்கு றுதிப்படி 1500 யூனிட் இலவச மின் சாரத் திட்டத்தை தமிழக அரசு உடன டியாக அமல்படுத்த வேண்டும் என சிஐடியு தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனம் வலியு றுத்தியுள்ளது. அவிநாசியில் உள்ள சிஐடியு அலுவலகத்தில், தமிழ்நாடு விசைத் தறி தொழிலாளர் மாநில சம்மேள னத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் புதனன்று நடைபெற்றது. அமைப் பின் மாநிலத் தலைவர் சோமசுந்த ரம் தலைமை தாங்கினார். இதில், பொதுச் செயலாளர் முத்துசாமி, மாநிலப் பொருளாளர் அசோகன் உள்ளிட்ட சம்மேளன நிர்வாகிகள் பங்கேற்றனர். சிஐடியு மாநில துணைத் தலைவர் சந்திரன் கலந்துகொண்டு, தேர்தல் முடிவு கள் மற்றும் தொழிலாளர் நலன் குறித்து ஆலோசனைகளை வழங் கினார். இதில், நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலின் போது, திருப்பூர் ஒன்றியம் பெருமாநல்லூரில் நடைபெற்ற பிரம்மாண்டப் பிரச்சா ரக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் முக்கிய வாக்குறுதி ஒன்றை அளித்திருந்தார். விசைத் தறித் தொழிலுக்கு 1500 யூனிட் இல வச மின்சாரம் வழங்கப்படும் என் பதே அந்த அறிவிப்பு. இக்கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத் தின்படி, புதிய அரசு பொறுப்பேற் றுள்ள நிலையில், இந்த வாக்குறு தியைத் தாமதமின்றி அரசாணை யாக வெளியிட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியில் விசைத்தறித் தொழில் ஒன்றிய அரசின் பல்வேறு பொருளாதாரக் கொள்கைகளா லும், நூல் விலை ஏற்ற இறக்கங்க ளாலும் விசைத்தறித் தொழில் தற் போது கடும் சரிவை சந்தித்துள் ளது. லட்சக்கணக்கான தொழிலா ளர்கள் வேலையிழக்கும் அபாயத் தில் உள்ளனர். இத்தொழிலை மீட் டெடுக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமா கும். விசைத்தறிகளுக்கு வழங்கப் பட வேண்டிய 1500 யூனிட் இலவச மின்சாரத்தை உடனடியாக அமல் படுத்த வேண்டும். கால மாற்றத் திற்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதிய மாக ரூ. 26,000 நிர்ணயம் செய்யப் பட வேண்டும். எட்டு மணி நேர வேலை முறையைத் தடையின்றி உறுதி செய்ய வேண்டும். தொழிலா ளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் உள் ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங் களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.