டாஸ்மாக் ஊழியர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் உரிய நடவடிக்கை எடுக்க சிஐடியு வலியுறுத்தல்
26 Dec 2025, 5:41 pm
<p><strong>டாஸ்மாக் ஊழியர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் உரிய நடவடிக்கை எடுக்க சிஐடியு வலியுறுத்தல்</strong></p>
<p>உதகை, டிச.26- குன்னூரில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து, பணியிலிருந்த ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய தொழிற்சங்க மைய நீலகிரி மாவட்டச் செயலாளர் சி. வினோத் வெளியிட்டுள்ள அறிக்கை யில், நீலகிரி மாவட்டம், குன்னூர் நக ரில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் (கடை எண் 8204) வியாழனன்று ஊழி யர்கள் வழக்கம்போல் பணியில் ஈடு பட்டிருந்தனர். அப்போது கடைக்குள் நுழைந்த குண்டர்கள், ஊழியர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த டாஸ்மாக் ஊழியர் சிகிச் சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பணியாற் றக் கூடிய டாஸ்மாக் ஊழியர்கள், இப்ப டிப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் டாஸ் மாக் ஊழியர்கள் மத்தியில் உயி ருக்கே பாதுகாப்பில்லை என்கிற அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத் தில் இப்படிப்பட்ட தாக்குதல் சம்பவங் கள் நடைபெறாமல் இருக்க, டாஸ்மாக் ஊழியர்களை தாக்கிய சமூக விரோதி களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டுவதும், தாக்குவதும் அன்றாட நடவடிக்கையாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சமூக விரோத செயல் களில் ஈடுபடுபவர்களை மிகக் கடுமை யான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். மேலும், டாஸ்மாக் ஊழி யர்களின் உயிருக்கும், கடையில் இருக் கும் உடைமைகளுக்கும் தகுந்த பாது காப்பு ஏற்பாடுகளை செய்து தர டாஸ்மாக் நிர்வாகமும், காவல் துறை யும் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என அதில் கூறப்பட்டுள்ளது.</p>
