தோட்டக்குறிச்சி, புகளூர் நகராட்சிகளில் சிஐடியு சங்கப் பெயர்ப்பலகை திறப்பு விழா
27 Sept 2026, 10:32 pm

தோட்டக்குறிச்சி, புகளூர் நகராட்சிகளில் சிஐடியு சங்கப் பெயர்ப்பலகை திறப்பு விழா

கரூர், செப். 27- கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் புகளூர் நகராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் சிஐடியு சங்கத்தில் இணைந்து பல்வேறு கோரிக்கைகளுக்காக தொடர் போராட்டங்களை நடத்தியதன் விளைவாக, ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்தில் கூடுதல் ஊதிய உயர்வை பெற்றுள்ளனர்.

இதையொட்டி, தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் புகளூர் நகராட்சியில் சிஐடியு சங்கப் பெயர்ப்பலகை திறப்பு விழா மற்றும் சிஐடியு செங்கொடியேற்றும் நிகழ்ச்சி ஞாயிறு அன்று நடைபெற்றது.

தோட்டக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற விழாவிற்கு, சங்கத்தின் கிளைத் தலைவர் அருக்காணி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம். சுப்பிரமணியன் சங்கப் பெயர்ப்்பலகையை திறந்து வைத்துப் பேசினார். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஜி.ஜீவானந்தம் சிஐடியு செங்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

புகளூர் நகராட்சியில் நடைபெற்ற புதிய சங்க துவக்க விழாவிற்கு சங்கத்தின் கிளை தலைவர் கார்த்தி தலைமை வகித்தார். புகளூர் நகராட்சி கவுன்சிலர் இந்துமதி சங்கப் பெயர்ப்பலகையை திறந்து வைத்துப் பேசினார். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் சி.முருகேசன் சிஐடியு செங்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.வி.கணேசன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் டி.என்.பி.எல். அரவிந்த், எம். ராஜேந்திரன், அ.காதர்பாட்சா, டி.என்.பி.எல். வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிர்மல் பள்ளி நிதியளிப்புசிஐடியு அயனாவரம் நிர்மல் பள்ளி நிதியாக, தோட்டக்குறிச்சி பேரூராட்சி ஊழியர்கள் சார்பாக ரூ.1,000, புகளூர்நகராட்சி உழியர்கள் சார்பாக ரூ.2,000 வழங்கப்பட்டது.