முந்தய பக்கம்

சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக் குழுவின் முப்பெரும் விழா

15 Dec 2025, 5:05 pm
சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக்  குழுவின் முப்பெரும் விழா
<p><strong>சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக் &nbsp;குழுவின் முப்பெரும் விழா</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, டிச.15- &nbsp;சிஐடியு 18 ஆவது அகில இந்திய மாநாட்டு கொடியேற்ற பிரச்சார இயக்கம், கூலி, உழைப்பு, மூலதனம் புத்தக வாசிப்பு மற்றும் கண்தான பத்திரம் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா, சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் திங்களன்று நடைபெற்றது. சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமையில், தென்னூர், டோல்கேட் டெப்போ, ஜங்சன் டிஆர்இயு ஆபிஸ், பொன்மலை ஜங்ஷன் காதிகிராப்ட், ஸ்ரீரங்கம், முத்தரசநல்லூர், புங்கனூர், காட்டூர், மன்னார்புரம் உள்பட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் முப்பெரும் விழா நடைபெற்றது. சிஐடியு தெப்பக்குளம், தென்கரை தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு, சங்க தலைவர் கோபால் தலைமை வகித்தார். சங்கக் கொடியை செயலாளர் புஷ்பாகரன் ஏற்றினார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார். தரைக்கடை சங்க மாவட்ட தலைவர் கணேசன் வாழ்த்துரை வழங்கினார். &nbsp;இதில் தரைக்கடை சங்க வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram