சிஐடியு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
20 Jul 2026, 11:27 pm
<p><strong>சிஐடியு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>சேலம், ஜூலை 20- ஆத்தூர் பணிமனை முன்பு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி திங்களன்று சிஐடியு போக்கு வரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வரவு–செலவு வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் முழுமை யாக ஒதுக்க வேண்டும். சிறப்பு இயக் கம் என்ற பெயரில் கூடுதல் பணிச் சுமை அளிக்கக் கூடாது என்றும், இரவில் பணிபுரியும் தொழிலாளர்க ளுக்கு தேவையான விடுப்புகளை மறுக்கக் கூடாது. ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளிலேயே அனைத்து பணப்பலன் களையும் வழங்க வேண்டும். பழைய மற்றும் பழுதடைந்த பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை வாங்க வேண்டும். பேருந்துகளுக்கு தர மான உதிரிபாகங்களை வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட் டன. மத்திய சங்க துணைத்தலைவர் ஆர்.கண்ணன் தலைமையில் நடை பெற்றது. இதில் சேலம் கோட்டத் தலைவர் செம்பன், பொதுச் செயலா ளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கிளைத் தலைவர் ஆர்.பழனிவேல், செயலா ளர் எம்.ஹரிஹரன், பொருளாளர் ரஃபி, ஓய்வு பெற்றோர் நல அமைப் பின் துணைப் பொதுச் செயலாளர் பி. முருகன் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.</p>
