போக்குவரத்து சிஐடியு சார்பில் தொடர் முழக்கப் போராட்டம்
8 hours before

போக்குவரத்து சிஐடியு சார்பில் தொடர் முழக்கப் போராட்டம்

கடலூர், ஆக. 25-போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும். காலிப் பணி யிடங்களை நிரப்பி ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் 24 மணி நேர தொடர் முழக்கப் போராட்டம் கடலூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கடலூரில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகத் தலைமையக அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் எஸ். ராம மூர்த்தி தலைமை வகித்தார்.

காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதியர்களுக்கு பலன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும், தற்காலிகத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மின்சாரப் பேருந்துகளை அரசே ஏற்று இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழி லாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

சிஐடியு மாவட்டச் செயலாளர் டி. பழனிவேல், மாநிலத் துணைத் தலைவர் பி. கருப்பையன், போக்குவரத்து ஊழி யர் சங்க பொதுச் செயலாளர் பி.முருகன், துணைத் தலைவர் எம்.முத்துக்குமரன், துணைப் பொதுச் செயலர் பி.கண்ணன், சிறப்புத் தலைவர் ஜி.பாஸ்கரன், மாவட்டப் பொருளாளர் எம். அரும்பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.