தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிஐடியு போக்குவரத்து சம்மேளன பயிற்சி முகாம் நிறைவு

3 Jun 2026, 10:36 pm
சிஐடியு போக்குவரத்து சம்மேளன பயிற்சி முகாம் நிறைவு
<p><strong>சிஐடியு போக்குவரத்து சம்மேளன பயிற்சி முகாம் நிறைவு</strong></p><p>பொள்ளாச்சி, ஜூன் 3- தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில், பொள்ளாச்சியில் மூன்று நாள் சிறப்பு பயிற்சி பட்டறை நிறைவடைந்தது. ஜூன் 1 ஆம்தேதி முதல் 3 ஆம்தேதி வரையில் நடைபெற்ற பயிற்சி முகா மில், ஊதிய ஒப்பந்தமும் சிஐடியு சாத னைகளும், செய்ய வேண்டியது என்ன? என்கிற தலைப்பில் வி.பிச்சை உரை யாற்றினார். தொடர்ந்து, ஐஓடி குளோ பல் நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் டாக்டர் சுந்தரி சுரேஷ், தலை மைத்துவ பண்புகளுக்கான செயல் முறை பயிற்சியை வழங்கினார். பின் னர், சமூக வலைத்தளமும் கருத்து உரு வாக்கமும் என்ற தலைப்பில் தீக்கதிர் டிஜிட்டல் பதிப்பு ஆசிரியர் எம். கண் ணன், வரலாற்றில் சுரண்டலும் போராட் டமும் என்ற தலைப்பில் ஏ. பாக்கியம், வாசிப்பின் அவசியம் என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜா.மாதவராஜ் ஆகியோர் உரையாற்றினார். நிறைவு நாளான புதனன்று, ஸ்தா பன விரிவாக்கம் குறித்த அறிக்கையை பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் சமர்ப்பித்தார். நிறைவாக, இன்றைய அரசியலும் எதிர்கால கடமையும் என்ற பொருளில் சம்மேளனத் தலைவர் அ.சௌந்திரராசன் சிறப்புரையாற்றி னார். ஏழு அமர்வுகளாக நடைபெற்ற பயிற்சி வகுப்பிற்கு, சம்மேளன நிர்வாகி கள், எம்.கனகராஜ், டி.ஜான்சன் கென் னடி, எஸ்.ஜோதி, பி.செல்லமுத்து, ஆர். துரை, கே.அன்பழகன், எம்.வெள்ளைத் துரை, வி.சசிகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். முடிவில், கோவை மண்டல பொதுச்செயலாளர் வேளாங்கண்ணி ராஜ் நன்றி கூறினார். மூன்று நாட்க ளாக நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறை யில் சம்மேளன நிர்வாகிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்று பயன்பெற்ற னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.