போக்குவரத்து சம்மேளன மாநில மாநாட்டு ஊழியர்களுக்கு நன்றி அறிவிப்புக்கூட்டம்
29 May 2026, 11:21 pm
<p><strong>போக்குவரத்து சம்மேளன மாநில மாநாட்டு ஊழியர்களுக்கு நன்றி அறிவிப்புக்கூட்டம்</strong></p><p>தருமபுரி, மே 29- சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாட்டு ஊழியர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 16 ஆவது மாநில மாநாடு, கடந்தாண்டு ஆகஸ்ட் 5,6,7 ஆகிய தேதிகளில் தருமபுரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட உழைத்திட்டவர் களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் தரும புரியில் வெள்ளியன்று நடைபெற்றது. மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் எம்.சுருளிநாதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தரராஜன், அரசு போக்குவ ரத்து கழக ஊழியர் சம்மேளன துணை பொதுச்செயலாளர் தாயனந்தன், பொருளா ளர் சசிகுமார், சிஐடியு மாநில துணைத்தலை வர் சி.நாகராசன், சேலம் மண்டல பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மண்டலச் செயலாளர் சி.ரகுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்காக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு பாராட்டி பயனாடை அணி விக்கப்பட்டது.</p>
