சுற்றுலா வேன் ஓட்டுநர் சங்க சிஐடியு கிளை தொடக்கம்
1 Oct 2026, 12:43 am
<p><strong>சுற்றுலா வேன் ஓட்டுநர் சங்க சிஐடியு கிளை தொடக்கம்</strong></p><p>உடுமலை, செப். 30-உடுமலை ராஜகாளியம்மன் கோவில் பகுதியில் சுற்றுலா வேன் ஓட்டுநர் உரிமையாளர் சங்க சிஐடியு கிளை தொடக்க விழா புதனன்று நடைபெற்றது. சிஐடியு உடுமலை நகரத் தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். மோட்டார் சங்கப் பொருளாளர் இயேசு ராஜ் வரவேற்றார். மோட்டார் சங்க சம்மேளனக் குழு உறுப்பினர் சுதா சுப்பிரமணியம், ஆட்டோ சங்கத் தலைவர்கள் முருகேசன், இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோட்டார் சங்க மாவட்டச் செயலாளர் ஒய். அன்பு, சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்து உரையாற்றினார். இதில் ஆட்டோ சங்க உடுமலை செயலாளர் ஜஹாங்கீர், ராஜன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக கிளைத் தலைவர் சம்பத்குமார் நன்றி கூறினார்.</p>
