ஒப்பந்தத் தொழிலாளர்களை அணிதிரட்ட சிஐடியு முடிவு
2 Jun 2026, 9:50 pm
<p><strong>ஒப்பந்தத் தொழிலாளர்களை அணிதிரட்ட சிஐடியு முடிவு </strong> </p><p>நெய்வேலி, ஜூன் 2 - சிஐடியு சங்கத்தின் மாநில அளவிலான ஒப்பந்தத் தொழிலாளர் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் சி.ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநிலத் துணைத் தலைவர் கே.விஜயன் அறிக்கையை முன்மொழிந்து உரையாற்றினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் மற்றும் மாநில துணைத் தலைவர் பி.கருப்பையன் ஆகியோர் தொழிலாளர்களின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிஐடியு மாநிலத் தலைவர் ஜி.சுகுமாறன் கூட்டத்தின் நிறைவுரையாற்றினார். கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்துத் திரட்ட முடிவெடுக்கப்பட்டது. இதற்காக, வருகிற ஜூலை 5-ஆம் தேதி திருச்சியில் கோரிக்கை கருத்தரங்கம் ஒன்றை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கருத்தரங்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கி, மாவட்ட அளவில் பேரவை கூட்ட ங்கள், ஆலை மட்டத்திலான வாயிற்கூட்டங்கள் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்களை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தின் இறுதியில், மாவட்டப் பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார். ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கத் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாகச் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
