தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு முடிவுக்கு வரவேற்பு ; ஊழியர் நலனில் அக்கறை தேவை சிஐடியு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்தல்

12 May 2026, 11:55 pm
அரசு முடிவுக்கு வரவேற்பு ; ஊழியர் நலனில் அக்கறை தேவை சிஐடியு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்தல்

அரசு முடிவுக்கு வரவேற்பு ; ஊழியர் நலனில் அக்கறை தேவை சிஐடியு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்தல்

சென்னை, மே 12- தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் 717 மதுபானக் கடைகளை மூடும் அரசின் முடிவை வரவேற்பதோடு, அங்கு பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம்

(சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது. அவசரகதியில் தயாரிக்கப்பட்ட பட்டியல்?

இது தொடர்பாக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே. திருச் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை யில்,

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகாமையில் உள்ள கடைகளை மூட முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளதைச் சமூகப் பொறுப்புள்ள தொழிற்சங்கம் என்ற முறையில் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், மூடப்பட வேண்டிய கடைகளைப் பட்டிய லிடுவதில் அதிகாரிகள் அவசர கதி காட்டியுள்ளதாகச் சுட்டிக்காட்டி யுள்ளார்.

குறிப்பாக, டாஸ்மாக் கடை களுக்கு இணையாக இயங்கி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் ‘எப்.எல்.2’ (FL2) மனமகிழ் மன்றங்கள் இந்த ஆய்வில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

அரசு கடையை மூடிவிட்டு, அதற்கு அருகிலேயே உள்ள தனியார் மதுக்கூடங்களைத் தொடர்ந்து இயங்க அனுமதிப்பது, அங்கு கூட்டத்தை அதிகரிக்கவே வழிவகுக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

3,000 ஊழியர்களின் எதிர்காலம்

தற்போது மூடப்படவுள்ள 717 கடைகளில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தக் கடைகளை மூடும் அதே வேளையில், அங்கு பணி யாற்றும் ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவது குறித்த தெளிவான அறிவிப்பு இதுவரை வெளியாக வில்லை. இது ஊழியர்களிடையே பணிப் பாதுகாப்பற்ற தன்மையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது

எனவே, பாதிக்கப்பட்ட 3,000 ஊழியர்களுக்கும் அவர்களது கல்வித் தகுதிக்கேற்ப கூட்டுறவுத் துறை அல்லது அரசின் இதர துறைகளில் நிரந்தர மாற்றுப்பணி வழங்கிட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.