முந்தய பக்கம்

திமுக தேர்தல் அறிக்கை குழுவிடம் சிஐடியு டாஸ்மாக் சங்கத்தினர் மனு

15 Feb 2026, 3:03 pm
திமுக தேர்தல் அறிக்கை குழுவிடம் சிஐடியு டாஸ்மாக் சங்கத்தினர் மனு
<p><strong>திமுக தேர்தல் அறிக்கை குழுவிடம் சிஐடியு டாஸ்மாக் சங்கத்தினர் மனு</strong></p> <p>கோவை, பிப்.15- சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக அமைத் துள்ள தேர்தல் அறிக்கைக்குழு கோவை வந்த நிலையில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து சிஐடியு டாஸ்மாக் ஊழி யர் சங்கத்தினர் மனு அளித்தனர். கோயம்புத்தூர் டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் அளித்த மனுவில், 1983 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லறை விற்பனை பிரிவு கடந்த 29.11.2003 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் தற்போது 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர் பணிகளில் உள்ளனர். 23 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றிய பொழுதும் பணி நிரந்தரம், பணிவரன்முறை காலமுறை ஊதியம், நிலை ஆணை சட்டம் உள்ளிட்ட எதுவும் இன்றியும், ஈஎஸ்ஐ, ஓய்வூதியம் போன்ற சட்ட சமூக பாதுகாப்புகளும் இன்றி அத்துக்கூலிகளாக பணியாற்றி வருகின்றோம். மேற்கண்ட கோரிக்கை களை நிறைவேற்ற டாஸ்மாக்-ல் செயல்படும் சங்கங்கள் கூட்டாகவும் தனித்த முறையிலும் பேராடி வருகின்றன. ஆகவே நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் அவர்கள், டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி உரிய தலையீடு செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram