தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

24 Jun 2026, 2:06 am
சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
<p><strong>சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>ஈரோடு, ஜூன் 23- நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சம்மேளன துணை பொதுச்செயலாளர் ஜான் (எ) ராதாகிருஷ்ணனை, டாஸ்மாக் நிர்வா கம் தற்காலிக பணி நீக்கம் செய்துள் ளது. இந்த பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஈரோடு மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் வி. பாண்டியன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் க.ரவிச்சந்திரன், சம்மேளனக்குழு உறுப்பினர் பொன். பாரதி ஆகியோர் கண்டன உரையாற்றி னர். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் நிறைவுரையாற்றினார். சங்கத்தின் பொருளாளர் ப.அர்த்த நாரீஸ்வரன் நன்றி கூறினார். கோவை கோவை, பீளமேடு எஸ்ஆர்எம் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சிஐடியு மாவட்டச் செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜான் (எ) ராதா கிருஷ்ணன், பொருளாளர் ராமகிருஷ் ணன், நுகர்வோர் வாணிப கழக ஊழியர் சங்கத்தின் ஏழுமலை, ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் ரத்தினகுமார், இன்ஜினியரிங் சங்க பொதுச்செயலாளர் துரைசாமி, சிஐ டியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டலச் செயலாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் எல்பிஎப் மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன், தலை வர் ராக்கிமுத்து, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் கணேசன், துணைச்செய லாளர் மணி, விற்பனையாளர் சங்கத் தின் சுதாகர், கடை மேற்பார்வையாளர் சங்கத்தின் முத்துப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். நீலகிரி நீலகிரி மாவட்டம், குன்னூர் டாஸ் மாக் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, சங்கத்தின் மாவட் டத் தலைவர் ஜே.ஆல்தொரை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் மகேஷ் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். இதில் சங்கத்தின் நிர்வாகி கள் நவீன் சந்திரன், தேவ சேனாதிபதி, சிவக்குமார், டாஸ்மாக் குடோன் சுமைப்பணி சங்க நிர்வாகி ரமேஷ் உ’ பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.