தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுபாட்டில் சேகரிப்பு திட்ட முறைகேடு - சிபிசிஐடி விசாரணை நடத்த சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் கோரிக்கை

4 Mar 2026, 5:01 pm
மதுபாட்டில் சேகரிப்பு திட்ட முறைகேடு - சிபிசிஐடி விசாரணை  நடத்த சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் கோரிக்கை
<p><strong>மதுபாட்டில் சேகரிப்பு திட்ட முறைகேடு - சிபிசிஐடி விசாரணை &nbsp;நடத்த சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் கோரிக்கை</strong></p> <p>சேலம், மார்ச் 4- மதுபாட்டில் சேகரிப்புத் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து &nbsp;சிபி சிஐடி விசாரணை நடத்த &nbsp;வேண்டும் என சிஐடியு டாஸ் மாக் ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. சேலத்தில் உள்ள சிஐடியு &nbsp;மாவட்டக் குழு அலுவலகத் தில், டாஸ்மாக் ஊழியர் ஊதிய சம்மேளனக் குழு ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று நடை பெற்றது. தலைவர் பி. முருகன் தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஊழியர் களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் மற்றும் &nbsp;அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரி வாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சிஐடியு மாநில துணைத் &nbsp;தலைவர் எஸ்.கே. மகேந்திரன், சம்மேளன &nbsp;பொதுச் செயலாளர் கே. திருச்செல்வன், பொருளாளர் ஜி. சந்திரன், துணைப் பொதுச் &nbsp;செயலாளர்கள் ஜான் அந்தோணிராஜ், கே.பி. ராமு, மாவட்டத் தலைவர் டி. உதயகுமார் &nbsp;உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஊதிய உயர் வில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையி னால் ஊழியர்களின் பணிக்கொடை) பாதிக் கப்படுகிறது. எனவே, பிடித்தம் செய்யப் பட்ட அத்தொகையை ஊழியர்களுக்கு உட னடியாக வழங்க வேண்டும். கிடங்கு பணி யில் உள்ளவர்களுக்கும், நீண்டகாலமாகப் பணி மறுக்கப்பட்ட ஊழியர்களுக்கும் உரிய &nbsp;முறையில் கடைப் பணிகளை வழங்க வேண் டும். காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை ஊழியர்கள் மூலம் திணிப் பதை கைவிட்டு, மாற்று முகமை மூலம் &nbsp;செயல்படுத்த வேண்டும். மேலும், இத்திட் டம் நடைமுறையில் உள்ள மாவட்டங்களில் போலி கணக்கு காட்டி முறைகேடு செய்ப வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும், இது குறித்து சிபிசிஐடி விசா ரணை நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலை வர் எஸ்.கே. தியாகராஜன் வாழ்த்திப் பேசி னார். மாவட்டச் செயலாளர் விஜயகுமார், நிர் வாகி செல்வராசு உள்ளிட்ட ஏராளமான நிர் வாகிகள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.