தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜனவரியில் வேலை நிறுத்தம்: சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

29 Nov 2025, 4:58 pm
ஜனவரியில் வேலை நிறுத்தம்: சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு
<p><strong>ஜனவரியில் வேலை நிறுத்தம்: சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு</strong></p> <p>பொள்ளாச்சி, நவ. 29- பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து, ஜனவரியில் டாஸ்மார்க் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என டாஸ் மாக் ஊழியர் சங்கத்தின் சம்மே ளன நிர்வாகக்குழு அறிவித்துள் ளது. சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங் கத்தின் சம்மேளன நிர்வாகக் குழு &nbsp;கூட்டம் பொள்ளாச்சியில் உள்ள &nbsp;வங்கி ஊழியர் சங்க கட்டிடத்தில் &nbsp;சனியன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் முருகன் தலைமை ஏற் றார். இதில், பொதுச்செயலாளர் கே.திருச்செல்வம், மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.ஜான்அந் தோனிராஜ், மாவட்டச் செயலாளர் &nbsp;கே.செந்தில்பிரபு உள்ளிட்ட மாநில &nbsp;நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், டாஸ்மாக் ஊழியர் களை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்கிட வேண் டும். காலி எச்சில் பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு ஊழி யர்களை பயன்படுத்த கூடாது. &nbsp;பணி நிரந்தரம் என்ற தீர்ப்புக்கு எதி ராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து வருகிற ஜனவரி முதல் வாரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடி வெடுக்கப்பட்டது. முன்னதாக நிர்வாகக் குழு கூட் டத்தை வாழ்த்தி, சிஐடியு மாவட்டப் &nbsp;பொருளாளர் ஆர்.வேலுசாமி, விதொச மாவட்டப் பொருளாளர் கே.மகாலிங்கம் ஆகியோர் வாழ்த் திப் பேசினர். மாவட்டப் பொரு ளாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நன்றி &nbsp;கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.