வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு சிஐடியு ஆதரவு
30 Oct 2026, 9:25 pm

வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு சிஐடியு ஆதரவு

புதுதில்லி எஸ்ஐஆர் மூலம் தேர்தல் முறையில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும்“வாக்குத் திருட்டுக்கு” எதிராகஜனநாயகத்தையும் அரசிய லமைப்பையும் பாதுகாக்க எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ அணி நவம்பர் 1 அன்று மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள் ளது. தில்லி ராம்லீலா மைதானத் தில் காலை 10 மணிக்கு மேல் இந்தபோராட்டம் தொடங்குகிறது.

இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) ஆதரவுதெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிஐடியு அகில இந்திய தலைவர் சுதீப் தத்தா கூறுகையில், “வாக்குத் திருட்டுக்கு எதிராக நாடு முழு வதும் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு சிஐடியுஉறுதியான ஆதரவை வழங்கி வருகிறது.

இத்தகைய சூழலில், எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நவம்பர் 1ஆம் தேதி போராட்டத்தில், ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் சிஐடியு-வின் செங்கொடிகளுடன் தில்லி ராம்லீலாமைதானத்தில் ஒன்று கூடுவார்கள். இந்த போராட்டம் மூலம் தில்லியும் ஒட்டுமொத்த இந்தியாவும்தொழிலாளர்களின் பலமிக்க போராட்ட அலையைக் காணும். “வாக்குத் திருட்டு” என்பது உறிஞ்சும் குணமுள்ள முதலா ளித்துவ அட்டைகளுக்கும், சூறையாடுபவர்களுக்கும் மட்டுமே சேவை செய்யும் அயோக்கியர்களின் ஆட்சிக்கு செயற்கையான ஆதரவை உருவாக்கு வதற்காக நடத்தப்படும் ஒரு திட்டமாகும். எனினும் வாக்குத் திருட்டில்ஈடுபடுபவர்களின் காலம் வேகமாக முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.