தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

19 Aug 2026, 11:17 pm
சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக.19–சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தவறிய திருப்பூர் மாவட்ட ஆட்சியரை திரும்பப்பெற வலியுறுத்தி, சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் தென்னம்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூரில் பல்லடம் சாலை, காங்கேயம் சாலை ஆகியபகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் கடைகள் அகற்றப்பட்டு, பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. அரசாணையின்படி நகர விற்பனைக்குழுவை அமைக்கக் கோரியும், பிரச்சனைகளுக்கு தீர்வு காணக் கோரியும் செவ்வாயன்று மாவட்டஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சியர் உரிய பதிலளிக்காமல் வியாபாரிகளை அவமதித்ததாகக்கூறி,புதனன்று தென்னம்பாளையத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் பி.பாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட முயன்ற வியாபாரிகளிடம் திருப்பூர் தெற்கு காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து மறியல் முயற்சி கைவிடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் போது,வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தவறிய மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், மாவட்டப்பொறுப்பு அமைச்சர் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்ட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.