கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
6 Dec 2025, 2:48 pm

சிஐடியு ஸ்டேன்டிற்கு இடையூறு செய்யக்கூடாது: நிர்வாக நடுவர் உத்தரவு

ஈரோடு, டிச.6- மூலப்பாளையம் பகுதியில் சிஐடியு ஸ்டேண்டிற்கு இடையூறு செய்யக்கூடாது என நிர்வாக நடுவர் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம், மூலப்பாளையம், அண்ணமார் பெட்ரோல் பங்க் எதிரில் சிஐடியு சாலைப் போக்குவரத்து சங்க மினி லாரி ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. அதில் அசோக்குமார் என்பவர் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்து வந்தார். இதுகுறித்து சிஐடியுவைச் சேர்ந்த தனபால் மற்றும் சங்கத்தின் சார்பில், மாவட்ட ஆட்சி யர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் உள் ளிட்ட அலுவலர்களிடம் புகாரளிக்கப்பட்டது. இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் இருதரப்பையும் அழைத்து விசாரணை நடத்தினார். இதனைத்தொடர்ந்து பிறப் பித்த உத்தரவில், கடந்த 40 ஆண்டுக ளாக எழுதப்பட்ட ஒப்பந்தப்படி விதிமுறை களுக்கு கட்டுப்பட்டு மினி லாரி ஸ்டேண்ட் அமைத்து தனபால் தரப்பினர் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் சரக்கு வாக னங்களை நிறுத்தி தொழில் செய்ய எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்று தெரி வித்துள்ளார். மேலும், எதிர் தரப்பினர் ஈரோடு மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் செயல்பட்டு வரும் ஸ்டேன்டி லிருந்து 50 மீட்டர் தொலையில் இவர் களைப் பாதிக்காதவாறு இடைவெளி விட்டு தொழில் செய்யலாம். சட்டம் ஒழுங்கு சீர் குலையும் வகையில் வாகனங்களை நிறுத்தி னால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்ப டும் என எச்சரிக்கை விடுத்து உத்தரவிட்டுள் ளார் என சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை வழக்கு 3 பேர் மீது குண்டர் சட்டம்

கோவை, டிச.6- விமான நிலையம் அருகே கடந்த நவம்பர் 2 ஆம் தேதி யன்று மாணவியை கடத்தி கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான மூன்று பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்ற சதீஷ், கார்த்திக் என்ற காளீஸ்வரன், தவசி என்ற குணா ஆகிய மூவரையும் பீளமேடு போலீசார் காலில் சுட்டு கைது செய்த னர். இவர்கள் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது 50 பக்க குற்றப்பத்திரிகை தாக் கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை தொடங்க வுள்ளது. திருப்பூர், கிணத்துக்கடவு, கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு, கொலை, இருசக்கர வாகனத் திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் இவர் கள் மீது உள்ளன. ஜாமீனில் வந்த பின்னரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. குண்டர் சட்ட உத்தரவு நகல் கோவை மத்திய சிறை யில் உள்ள மூவரிடமும் வழங்கப்பட்டது.