தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

75% கூலி உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள்: சிஐடியு சார்பில் கையெழுத்து இயக்கம்

26 Jun 2026, 1:42 am
75% கூலி உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள்: சிஐடியு சார்பில் கையெழுத்து இயக்கம்

75% கூலி உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள்: சிஐடியு சார்பில் கையெழுத்து இயக்கம்

நாமக்கல், ஜூன் 25- விசைத்தறி தொழிலாளர்களுக்கு 75 சதவீத கூலி உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் பள்ளிபாளையம் பகுதியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறை முகமாகவும் லட்சக்கணக்கான தொழி லாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வரு கின்றனர்.

தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் தொடர்பான ஒப்பந்தங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜவுளி உற் பத்தியாளர்கள், அரசு அதிகாரிகள் மற் றும் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கம் இடையே ஏற்படுத்தப்படுவது வழக்கம்.

கடந்த 2023 மே மாதம் 10 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலை யில், அந்த ஒப்பந்தம் 2025 மே மாதத் துடன் முடிவடைந்தது.

ஒப்பந்த காலம் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் புதிய கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற வில்லை என தொழிற்சங்கம் குற்றம்சாட்டி யுள்ளது.

இதைய டுத்து, 75 சதவீத கூலி உயர்வு உள் ளிட்ட9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், புதிய கூலி ஒப்பந்தத்தை உடனடியாக அமல்ப டுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி தொழிலாளர்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் வியாழனன்று காவேரி ஆர்.எஸ்., புதுப்பாளையம், வ.உ.சி. நகர், கொக்கராயன்பேட்டை, பாப்பம் பாளையம் மற்றும் ஆவாரங்காடு உள் ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. வ.உ.சி.நகர் பகுதியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க ஒன்றிய உதவித் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.

சங்க மாவட்டச் செயலாளர் எம்.அசோகன் தொடங்கி வைத்தார்.

இதேபோன்று கொக்கராயன் பேட்டை பாப்பம்பாளையம் பகுதியில் சங்க ஒன்றியப் பொருளாளர் ஐ.செங் கோட்டையன் தலைமையிலும், ஆவா ரங்காடு பகுதியில் சங்க ஒன்றிய உதவி செயலாளர் பி.குமரேசன் தலைமையி லும் நடைபெற்றது.

இதில் சங்க நிர்வாகி கள் என்.அசன், ஜி.பெருமாள், அங்க முத்து, தங்கராசு, எம்.சரவணன், ஏ.ஈஸ் வரன், தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

. தொழிலாளர் துறையும் தமிழக அரசும் தலையிட்டு விரைவில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.