தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பட்டாசுத் தொழிலில் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்! சிஐடியு கருத்தரங்கில் வலியுறுத்தல்

14 Jun 2026, 11:23 pm
பட்டாசுத் தொழிலில் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்! சிஐடியு கருத்தரங்கில் வலியுறுத்தல்

பட்டாசுத் தொழிலில் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்!

சிஐடியு கருத்தரங்கில் வலியுறுத்தல்

விருதுநகர், ஜூன் 14- விபத்துகள் இல்லாத பட்டாசுத் தொழி லும், உயிரிழப்புகள் ஏற்படாத பாதுகாப் பான பணிச்சூழலும் உருவாக்கப்பட வேண்டும். பட்டாசு உற்பத்தி அனைத்து விதி முறைகளுக்கும் உட்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, விருது நகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சிஐடியு பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் சார்பில் கருத்தரங்குகள் நடைபெற்றன. சாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு எஸ். சீதாலட்சுமி மற்றும் எஸ். கருப்பசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் கே.விஜயகுமார் வர வேற்புரையாற்றினார். சாத்தூர் கோட்டாட்சி யர் கனகராஜ் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்வில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநர் சிவக் குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.மகா லட்சுமி, மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா மற்றும் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலாளர் சந்திரன் ஆகியோர் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தொழி லாளர் நலன் தொடர்பாக விளக்க உரை யாற்றினர். நிகழ்ச்சியின் முடிவில் எம். பாண்டியன் நன்றி கூறினார். இதில் சிஐடியு நிர்வாகிகள் எஸ்.சரோஜா, எஸ்.மனோஜ்குமார், மாரி முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியில் நடைபெற்ற மற்றொரு கருத்தரங்கிற்கு ஒன்றியச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் ஆர்.பாண்டி மற்றும் எம்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியப் பொருளாளர் ஏ.இன் னாசியம்மாள் வரவேற்புரையாற்றினார். கருத்தரங்கில் தொழிலக பாதுகாப்பு மற் றும் சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஆர். ரவிச்சந்திரன் மற்றும் சிஐடியு மாவட்டப் பொதுச் செயலாளர் எம்.சி.பாண்டியன் ஆகி யோர் பட்டாசுத் தொழிலில் பாதுகாப்பு விதி முறைகளை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து விளக்கிப் பேசினர். மேலும், சிஐடியு நிர்வாகிகள் பி.நேரு, கே.ஆரோக்கியராஜ் ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர். நிகழ்ச்சியின் நிறைவில் எம்.விக்னேஸ்வரன் நன்றி கூறினார். இரு கருத்தரங்குகளிலும் ஏராளமான பட் டாசுத் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.