அவிநாசி - கோபிசெட்டிபாளையம் சிஐடியு தூய்மைப் பணியாளர் சங்கம் ஆதரவு
8 Apr 2026, 5:30 am

அவிநாசி - கோபிசெட்டிபாளையம் சிஐடியு தூய்மைப் பணியாளர் சங்கம் ஆதரவு

அவிநாசி, ஏப். 7- அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கோவிந்தராஜுக்கு, திருப்பூர்த் தூய்மைப் பணியாளர் சங்கம் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அவிநாசி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சிஐடியு தூய்மைப் பணியாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய சங்க நிர்வாகிகள், அவிநாசி மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக கூட்டணி வேட்பாளர் கோவிந்தராஜ் உறுதி அளித்துள்ளதால் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினர்.