சிஐடியு தூய்மைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
17 Jul 2026, 11:31 pm
<p><strong>சிஐடியு தூய்மைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>அவிநாசி, ஜூலை 17- அவுட்சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும், தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவல கம் முன்பு சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களைத் தகுதி நீக்கம் செய்யாமல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், இ.பி.எஃப், இ.எஸ்.ஐ உள்ளிட்ட சட்டப்பூர்வ தொழிலாளர் நலன்களை முறையாக வழங்க வேண்டும், மேற்பார்வையாளர்களின்அத்துமீறல்களைத் தடுக்க வேண்டும் மற்றும் பெண் தூய்மைப் பணியாளர்கள் மீது கூடுதல் வேலைப்பளுவைத் திணிக்கக் கூடாது என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரங்கராஜ், மாவட்டத் தலைவர் பழனிச்சாமி, அவிநாசி சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பனியன் தொழிலாளர் சங்க அவிநாசி தலைவர் பாலசுப்பிரமணியம், நகரமன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியம், தேவராஜன் மற்றும் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.</p>
