கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
7 Apr 2026, 5:42 pm

அவிநாசி - கோகிலாமணிக்கு சிஐடியு தூய்மைப் பணியாளர் சங்கம் ஆதரவு

அவிநாசி, ஏப். 7- அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கோகிலாமணிக்கு, திரு முருகன்பூண்டி சிஐடியு தூய்மைப் பணி யாளர் சங்கம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. சிஐடியு தூய்மைப் பணியாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அம் மாபாளையம் பகுதியில் செவ்வாயன்று நடைபெற்றது. சங்கத்தின் தலைவ ரும், நகரமன்ற உறுப்பினருமான சுப்பிர மணியம் கூட்டத்திற்குத் தலைமை தாங் கினார். சங்கச் செயலாளர் லோகநா தன், சிஐடியு சங்க நிர்வாகி வெங்கடாச லம் மற்றும் பனியன் சங்கச் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் நடை பெறவுள்ள தேர்தலின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து, அவிநாசி தொகுதி திமுக வேட்பாளர் கோகிலாமணிக்கு ஆதரவு அளிப்பதென ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வேட்பாளர் கோகிலாமணி தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். மேலும், தமக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக சங்கத்தினருக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வின் போது, திமுக நகர மன்றத் தலைவர் குமார், நகரச் செயலா ளர் மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் பொன்னுச்சாமி உள் ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர் வாகிகள் உடனிருந்தனர்.

காங்கேயம் தொகுதியில் சிபிஎம் தேர்தல் பிரச்சாரம்

திருப்பூர், ஏப். 7 - காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பிரச் சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங் கேயம் தாலுகா குழு அலுவலகத்தில் திங்க ளன்று கட்சியின் தேர்தல் பணிக்குழு ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கே யம் தாலுகா குழு உறுப்பினர் ப.கருப்புசாமி தலைமை ஏற்றார். இக்கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர். குமார், தாலுகா செயலா ளர் இரா.செல்வராஜ், தாலுகா குழு உறுப் பினர் எம். சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் வரும் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு முத்தூர், மாவை 6 மணிக்கு வெள்ள கோவில் நடேசன் நகர், இரவு 7.30 மணிக்கு வெள்ளகோவில் கடை வீதி ஆகிய பகுதிக ளில் மார்க்சிஸ்ட் கட்சி தேர்தல் பிரச்சார தெரு முனைக் கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக் கப்பட்டது. ஏப்ரல் 13ஆம் தேதி திங்களன்று மாலை 5 மணிக்கு காங்கேயம் களிமேட்டிலும், புதன் கிழமை மாலை 5 மணிக்கு நத்தக்காடையூரி லும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட் பாளர் மு. பெ.சாமிநாதனுக்கு ஆதரவு திரட்டு வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூலப்பொருள் விலையேற்றம்: ஜாப் ஆர்டர் கட்டணத்தை உயர்த்த தொழிற்துறை முடிவு

கோவை, ஏப்.7- மூலப்பொருள் விலையேற்றத்தால், ஜாப் ஆர்டர் கட்ட ணத்தை உயர்த்த தொழிற் துறை முடிவு செய்துள்ளதாக சிறு குறு தொழில் முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சிறுகுறு தொழில் முனைவோர் சங்க தலைவர் ஜேம்ஸ் கூறும் போது, தொழிற் துறையை சார்ந் துள்ள நாங்கள் தொடர்ச்சியாக இன்னல்களை சந்தித்து வருகி றோம். கடந்த நான்கு ஆண்டுகளாக மூலப்பொருட்களின் விலை கட்டுப்பாடு இன்றி உயர்ந்து வருவதால், கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள தொழிற் துறையினர் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகி றோம். எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் மூலப் பொருட்க ளின் விலை ஏற்றப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் இதனை கண்காணிக்க தனி கமிட்டி அமைக்க வேண்டும் என டில்லியில் 4 நாட்கள் முகா மிட்டு ஒன்றிய அமைச்சரை சந்தித்து பேசி வலியுறுத்தினோம். அப்போது தங்கத்தின் விலை போல தொடர்ந்து மூலப் பொருள் விலை ஏற்றம் இருந்தால், தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்படுவோம் என தொடர்ந்து தெரிவித்து வந்தோம். நடவடிக்கை இல்லை. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, பெரும் கார்ப் பரேட் முதலாளிகள் மட்டும் அதிக லாபத்தை ஈட்டி வருகின்ற னர். ஆனால் சாதாரண சிறு தொழில் முனைவோர் கடுமை யாக பாதிக்கப்பட்டு வருகிறோம். கோவையில் சுமார் 30 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ஜாப் ஆர்டர்கள் செய்யக்கூடிய தொழில் முனைவோர் செயல்பட்டு வருகிறோம். உற்பத்தி தொழில் செய்யக் கூடியவர்கள் விலையை குறைக்க, ஜாப் ஆர்டர்கள் கட்டணத்தை குறைத்து வருகிறார்கள். இப்போது கிட்டத் தட்ட 30 சதவீத தொழில்துறையினர் வெளியேறி உள்ள னர். மீதமுள்ள 70 சதவீதத்தினர் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதை உணர்ந்து ஒன்றிய அரசு உடனடியாக மூலப் பொருள் விலை ஏற்றத்தை கட்டுப்ப டுத்த விலை நிர்ணய கமிட்டியை அமைக்க வேண்டும். மூலப் பொருள் ஏற்றுமதிக்கு தடை விதித்து, இறக்குமதிக்கு வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்றார்.

மனு தாக்கல் செய்ய முடியாததால் பெண் வாக்குவாதம்

நாமக்கல், ஏப்.7- குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாள ராக போட்டியிட கடைசி நேரத்தில் வந்த பகுஜன் சமாஜ் வாடி கட்சி பெண் மனுத்தாக்கல் செய்ய முடியாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்ட மன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள சூழ்நிலை யில், திங்களன்று வேட்பு மனு செய்ய கடைசி நாள் என்ப தால் திமுக, அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டிக்கொண்டு வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இந் நிலையில், தாக்கல் செய்யும் நேரம் மதியம் 3 மணி அளவில் தருவாயில் சுமார் 2.50 மணிக்கு வந்த பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த நஸ்ரின் பானு என்பவர் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினார். அந்த விண்ணப்பம் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் கையொப்பங்கள் இடப்படாமலும் இருந்தது. மேலும் வேட்பா ளருக்கு கட்ட வேண்டிய முன் தொகை 10,000 ரூபாயை கொண்டு வரவில்லை. எனவே முன் தொகையை கட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வலியுறுத்தினார். அவர் முன் தொகை கட்ட ணத்தை வங்கியில் இருந்து எடுத்து வருவதற்காக சென்று விட்டு மீண்டும் வரும்பொழுது காலம் கடந்து விட்டதால், தேர்தல் நடத்தும் அலுவலர் குமரன் தனது இருக்கையை விட்டு சென்று விட்டார். இதனால் நஸ்ரின் பானு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய இயலாமல் தவித்தார். ஏமாற்றம் அடைந்த அவர் வட் டாட்சியர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித் தார். அப்போது அங்கு வந்த போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

ரயிலில் எடுத்து வரப்பட்ட கஞ்சா பறிமுதல்

ஈரோடு, ஏப்.7- அசாமிலிருந்து ஈரோட்டிற்கு வந்த ரயிலில் எடுத்து வரப் பட்ட 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அசாம் மாநிலம், திப்ரூகரிலிருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் விரைவு ரயில் ஞாயிறன்று மாலை ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்தது. அதில் ரயில்வே போலீசார் சோதனை செய்தபோது, முன்பதிவற்ற பெட்டியில் கேட்பாரின்றி கிடந்த பை ஒன்றை சோதனை செய்தனர். அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை, ஈரோடு மதுவிலக்கு போலீஸில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என் பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.