அவிநாசி - கோபிமணமணிக்கு சிஐடியு தூய்மைப் பணியாளர் சங்கம் ஆதரவு
8 Apr 2026, 5:30 am

அவிநாசி - கோபிமணமணிக்கு சிஐடியு தூய்மைப் பணியாளர் சங்கம் ஆதரவு

அவிநாசி, ஏப்.7- அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கோபிமணமணிக்கு, திருமுருகன்பூண்டி சிஐடியு தூய்மைப் பணியாளர் சங்கம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

சிஐடியு தூய்மைப் பணியாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அவிநாசி பகுதியில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். இதில், அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கோபிமணமணி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து ஆதரவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.