முந்தய பக்கம்

போராடும் வடமாநில தொழிலாளர்களுக்கு நிதியுதவி

25 May 2026, 1:29 am
போராடும் வடமாநில தொழிலாளர்களுக்கு நிதியுதவி
<p><strong>போராடும் வடமாநில தொழிலாளர்களுக்கு நிதியுதவி</strong></p><p>சேலம், மே 24- தொடர் போராட்டங்க ளில் ஈடுபட்டு வரும் வட மாநில தொழிலாளர்களுக்கு சேலத்தில் உண்டியல் மூலம் வசூல் செய்து, நிதியுதவி வழங்கப்பட்டது. தில்லி, நொய்டா, கிரேட் டர் நொய்டா, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், குஜ ராத், ஜம்மு - காஷ்மீர் உள் ளிட்ட வடமாநிலங்களில் வாழ்வாதாரத்திற்காக தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின் றனர். அத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் வெகுமக்களிடம் நிதி வசூல் செய்து கொடுப்பது என்றும், அதற்காக தொழிற்சாலைகள், பொதுமக்கள் கூடு கின்ற இடங்களில் உண்டியல் வசூல் செய்து நிதியுதவி வழங்க வேண்டும் என சிஐடியு அகில இந்திய கமிட்டி அறைகூவல் விடுத் தது. அதன்படி, சேலம், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உண்டியல் வசூல் நடைபெற்றது. மொத்தம் ரூ.10490யை சிஐ டியு மாநிலச் செயலாளர் கோபிகுமார், மாவட் டச் செயலாளர் கோவிந்தனிடம், போக்கு வரத்து நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram