முந்தய பக்கம்

சிஐடியு செயின்ட் கோபைன் தொழிற்சங்க பேரவை

1 hour before
சிஐடியு செயின்ட் கோபைன் தொழிற்சங்க பேரவை

சிஐடியு செயின்ட் கோபைன் தொழிற்சங்க பேரவை

ஈரோடு, அக். 3-செயின்ட் கோபைன் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

பெருந்துறை செயின்ட் கோபைன் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) 2 ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம், ஈரோடு டி.பி.முத்துசாமி நினைவகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. தலைவர் எஸ்.சுப்ரமணியன் தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணைச்செயலாளர் எம்.சந்திரன்துவக்கவுரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.மாரப்பன், உதவித்தலைவர்கள் எச்.ஸ்ரீராம், ஜோதிமணி, பொருளாளர் வி.சுரேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், தொழிற்சாலையில் அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றும் நிரந்தர தொழிலாளர்களுக்கு வருடாந்திர ஊதியஉயர்வாக தற்போது பெற்றுவரும் ஊதியத்துடன் மாதம் ரூ.10 ஆயிரம் உயர்வு வழங்க வேண்டும். ஊதிய உயர்விற்கான நிபந்தனைகளை கைவிட வேண்டும். அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியும் சேர்த்து 70 விழுக்காடு இருக்கக்கூடிய முறையில் ஊதிய கட்டமைப்புஇருந்திட வேண்டும். மிகை நேர பணிக்கு மிகை நேரஊதியத்தில் மாறுதுல் செய்து வாங்கும் மொத்த சம்பளத்தை கணக்கிட்டு வழங்கவேண்டும். 4 வருடங்கள் பணி முடித்தவர்களுக்கு உயர்நிலை தீர்மானிக்கப்பட்ட அதற்கான ஊதியம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தலைவராக எஸ்.சுப்ரமணியன், செயலாளராக எஸ்.சுரேந்திரன், பொருளாளராக ஏ.அன்பரசு, துணைத்தலைவர்களாக என்.ஜெயபால், எஸ்.மாரீஸ்வரன், எஸ்.தென்னரசு, துணைச்செயலாளர்களாக பி.தினேஷ்குமார், ஏ.கோபிநாத், எஸ்.ராஜ்குமார் மற்றும் 11 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிறைவாக, அன்பரசு நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram