முந்தய பக்கம்

சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க பேரவை

17 Aug 2026, 11:26 pm
சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க பேரவை

சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க பேரவை

கோவை, ஆக.17-சிஐடியு கோவை மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்க 8 ஆவது ஆண்டு பேரவைக் கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

சிஐடியு கோவை மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்க 8 ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் அண்மையில் கணபதி புதூர் சிஐடியு மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவர் என். ஜாகீர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எச். சாகுல் ஹமீது வரவேற்றார். முன்னதாக சங்க கொடியினை வி.கருப்பையா ஏற்றி வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி துவக்கவுரையாற்றினார். சம்மேளன தலைவர் சி.திருவேட்டை சிறப்புரையாற்றினார். மாநில துணைத்தலைவர் பி.பாலன், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்க மாவட்டச் செயலாளர் பி.ராமு வேலை அறிக்கையையும், பொருளாளர் ஐ.பைரோஸ்கான் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

இதில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். உடனடியாக நகர விற்பனைக்குழு தேர்தல் நடத்தப்பட வேண்டும். காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சாலையோர வியாபாரிகளுக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதனைதொடர்ந்து மாவட்டத் தலைவராக என்.ஜாகீர், செயலாளராக பி.ராமு, பொருளாளராக ஐ.பைரோஸ்கான் உள்ளிட்ட 20 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். சாலையோர வியாபாரிகள் திரளாக

பங்கேற்ற பேரவையின் நிறைவாக, துணைத் தலைவர் எஸ். கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram