தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஈரானில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்திடுக! ஒன்றிய-மாநில அரசுக்கு சிஐடியு கோரிக்கை

17 Mar 2026, 3:26 pm
ஈரானில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான தமிழக  மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்திடுக! ஒன்றிய-மாநில அரசுக்கு சிஐடியு கோரிக்கை
<p><strong>ஈரானில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான தமிழக &nbsp;மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்திடுக! ஒன்றிய-மாநில அரசுக்கு சிஐடியு கோரிக்கை</strong></p> <p>நாகர்கோவில், மார்ச் 17- ஈரான் மீது ஏகாதிபத்திய அமெரிக்கா-இஸ்ரேல் ஆகிய நாடுகள் ராணுவத் தாக்கு தல் நடத்தி வருகின்றன. இத்தகைய போர்ச்சூழலில் ஈரானில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களை, ஒன்றிய-மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மீட்க &nbsp;வேண்டும் என்று தமிழ்நாடு மீன்பிடி தொழிற் சங்க கூட்டமைப்பு (சிஐடியு) வலியுறுத்தி யுள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநில கெளரவத் &nbsp;தலைவர் செலஸ்டின், பொதுச் செயலாளர் அந்தோணி மற்றும் பொருளாளர் ஜெயசங்க ரன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடு கள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் காரணமாக அந்த நாட்டில் பதற்றமான சூழல் &nbsp;நிலவுகிறது. வளைகுடா நாடுகளில் மட்டும் &nbsp;சுமார் 90 லட்சம் இந்தியர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். இதில் ஈரானில் மட்டும் சுமார் 10,000 இந்தியர்கள் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடியப்பட்டினம், குளச்சல், இனையம், முட்டம், ராஜாக்கமங்கலம் துறை, &nbsp;ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான &nbsp;கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் துபாய், ஓமன், கத்தார், &nbsp;ஈரான் மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடு களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரு கின்றனர். தற்போது ஈரானில் மட்டும் தூத்துக்குடி, நெல்லை, இராமநாதபுரம், கடலூர் மற்றும் &nbsp;குமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத் திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சிக்கியுள்ளனர். &nbsp;அங்கு நிலவும் போர்ச் சூழலால் மீனவர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். அவர்களைப் பாதுகாக்க ஒன்றிய அரசு இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அங்குள்ள மீனவர் உண்ண உணவு இன்றியும், &nbsp;குடிக்கத் தண்ணீரும் இல்லாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். &nbsp;ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களைப் &nbsp;பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வரவும் &nbsp;தமிழக அரசும், ஒன்றிய அரசும், வெளியுறவுத் &nbsp;துறையும் உடனடியாகத் தலையிட வேண்டும். போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டு, வாழ்வா தாரம் இழந்து தவிக்கும் மீனவர்களை மீட்க &nbsp;வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.